யூடியூபர் இர்பான்.. காருக்குள் இருந்தாரா? விபத்தில் உயிரிழந்த பெண் யார் தெரியுமா? கதிகலங்கிய பொத்தேரி
சென்னை: பிரபல யூடிபர் இர்பான் கார் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.
மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான்.. இவர் சென்னையை சேர்ந்தவர்.. மிகச்சிறந்த திறமைசாலி.. இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் இவரது யூடியூப் வீடியோக்களுக்கு 3.64 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

ஹோட்டல்கள்:
தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர்.. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை ஒன்றையும் விடமாட்டார்.. ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் உணவு பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெருகி வருகிறது.. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட தகவல்களை நிறைவுடன் தன்னுடைய வீடியோவில் தருபவர்.. சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்..
இந்நிலையில், இர்பானின் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பான் கார் சென்றபோது, எதிரே வந்த பெண்மணி மீது பலமாக மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.. இர்பானின் கார் டிரைவர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், உயிரிழந்த பெண் யார்? விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து கூடுதல் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
கார் விபத்தில் உயிரிழந்த நபர் பெயர் பத்மாவதி.. 55 வயதாகிறது.. பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரில் வசித்து வந்திருக்கிறார்.. பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாககவும் வேலை பார்த்து வந்துள்ளார்.. இன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.. அங்கு பணி முடிந்ததுமே, மறைமலை நகரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்..
பரிதாபம்:
பிறகு, மகளை சந்தித்துவிட்டு, மறுபடியும் பொத்தேரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகரில் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றுள்ளார்.. அப்போதுதான், இர்பானின் ஆடம்பரமான சொகுசு கார் சொசுகு வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியிருக்கிறது.. இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார் பத்மாவதி..

இந்த விபத்து குறித்து, தகவலறிந்து உடனடியாக பொத்தேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த பத்மாவின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு, விபத்தை ஏற்படுத்திய காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணையையும் துவங்கினர்.. காரை அசாருதீன் என்பவர் ஓட்டியுள்ளார். இவர் சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர்...
இர்பான் எங்கே?:
இவரிடம் விசாரைணை நடத்தியபோதுதான், அந்த சொகுசு கார், இர்பானுடையது என்பதே போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து, அசாருதின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். காரை ஓட்டியது அசாருதின் என்றாலும், விபத்து நடந்தபோது, காருக்குள் இர்பான் இருந்தாரா? அல்லது அசாருதீன் குடிபோதையில் காரை ஓட்டினாரா? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும், விபத்து நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் போலீசார்..!!
இதனிடையே, இன்னொரு அதிர்ச்சி தகவலும் கசிந்து வருகிறது.. அதாவது, விபத்து நடந்த இடத்தில் இர்பானை நேரடியாக பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.. ஒருவேளை, கார் ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? அல்லது இர்பான் சம்பவ இடத்திலேயே இல்லையா? என்றும் அடுக்கடுக்கான சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.. போலீசார் தீவிரமான விசாரணையை நடத்திவருவதால், விரைவில் இதுகுறித்த உண்மையான தகவல்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications