திடீர் ட்விஸ்ட்.. யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி.. "நான்தான் கார் ஓட்டினேன்".. சரணடைந்தது யார்?
சென்னை: பிரபல யூடிபர் இர்பான் கார் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், பெண் ஒருவர் தூக்கிவீசப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.. இதனிடையே, காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதில் புது சந்தேகம் கிளம்பி உள்ளது.
மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான்.. இவர் சென்னையை சேர்ந்தவர்.. மிகச்சிறந்த திறமைசாலி.. இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் இவரது யூடியூப் வீடியோக்களுக்கு 3.64 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

சந்துபொந்து ஹோட்டல்கள்: தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர்.. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை ஒன்றையும் விடமாட்டார்.. ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் உணவு பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெருகி வருகிறது.. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட தகவல்களை நிறைவுடன் தன்னுடைய வீடியோவில் தருபவர்.. சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்..
சுருண்டு விழுந்து பலி: இந்நிலையில், நேற்றைய தினம் இர்பானின் கார் விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பான் கார் சென்றபோது, எதிரே வந்த பெண்மணி மீது பலமாக மோதிவிட்டது.. இதில் அந்த பெண் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார்..
இதையடுத்து, பொத்தேரி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று, உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதையடுத்து, விபத்து எப்படி நடந்தது? இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரிக்க துவங்கினர்.
கார் விபத்தில் உயிரிழந்த நபர் பெயர் பத்மாவதி.. 55 வயதாகிறது.. பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரில் வசித்து வந்திருக்கிறார்.. பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.. இன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.. அங்கு பணி முடிந்ததுமே, மறைமலை நகரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார்..

பரிதாபம்: பிறகு, மகளை சந்தித்துவிட்டு, மறுபடியும் பொத்தேரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகரில் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றுள்ளார்.. அப்போதுதான், எதிரேவந்த சொகுசு கார் மோதி, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு, விபத்தை ஏற்படுத்திய காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, அந்த கார் யாருடையது என்று விசாரணையையும் துவங்கினர்.. அப்போதுதான், அந்த சொகுசு கார் யூடியூபர் இர்பானுடையது என்று தெரியவந்தது..
காரை அசாருதீன் என்பவர் ஓட்டியுள்ளார். இவர் சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர்... இதையடுத்து, அசாருதின் மீது வழக்கு பதிவு செய்தனர்.. இந்நிலையில், விபத்து நடந்தபோது, காருக்குள் இர்பான் இருந்ததாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.. விபத்து நடந்த இடத்தில் இர்பானை நேரடியாக பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்களே தகவல் தெரிவித்துள்ளார்கள்.. ஒருவேளை, கார் ஓட்டிவந்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு இர்பான் எஸ்கேப் ஆகிவிட்டாரா? அல்லது இர்பான் சம்பவ இடத்திலேயே இல்லையா? என்ற இருவிதமான கேள்விகள் எழுந்துள்ளன.
இர்பான் எங்கே?: காரை மோதியது இர்பான் என்றும், இப்போதுதான் கல்யாணம்முடிந்ததால், மேலிடத்து செல்வாக்குடன் டிரைவரை பலிகடாவாக ஆக்கியிருக்கிறாரோ என்கிற சர்ச்சையும் இப்போது கிளம்பி உள்ளது..
இர்பானை, தாங்கள் பார்த்ததாக அந்த பகுதி மக்கள் சொல்லும் நிலையில், திடீரென "காரை ஓட்டியது தான் தான்" என்று டிரைவர் அசாருதீன், தானாகவே ஏன் போலீசில் சரணடைந்தார் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.. இப்படி பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இதுகுறித்து சோஷியல் மீடியாவில் வெளிவந்தவண்ணம் உள்ளன.. எனவே, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது கைதான அசாருதீன் தானா- அல்லது யூடியூபர் இர்பான்தானா? என்பது போலீசாரின் விசாரணைக்குப்பிறகே வெளிச்சத்திற்கு வரும்.












Click it and Unblock the Notifications