ஸ்டாலின் மேஜையில் இருந்த உளவு ரிப்போர்ட்.. வெளியேறும் அந்த கூட்டணி கட்சி.. உடனே எடுத்த துரித ஆக்சன்
சென்னை: திமுக கூட்டணி கட்சி ஒன்றை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 நடக்க இன்னும் 1 வருடம் கூட இல்லை. இதனால் இப்போதே தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும், திரைமறைவில் நடக்க தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக கூட்டணியை உடைக்க அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தீவிரமாக முயன்று வருகின்றன.

திமுக கூட்டணி முறிவு?
நேற்று கூட அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று எடப்பாடி கூறிய நிலையில் சிபிஎம், விசிக அதை புறக்கணித்துள்ளது,
திருமாவளவன் வைத்த குற்றச்சாட்டில், அதிமுக - பாஜகவின் பழைய கூட்டணியில் இருந்த கட்சிகளே மீண்டும் அவர்களுடன் சேரவிலையே. பாமக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் புதிய புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றெல்லாம் சொன்னீர்களே.. இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய முடியாமல் போய்விட்டது? ஏன் உங்கள் கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளே உங்களுடன் சேர மறுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை இப்போது அழைக்கிறீர்கள்.
இது நீங்கள் சொன்ன கருத்தா ? அப்படி தெரியவில்லை. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யாரோ சொல்லிக்கொடுத்த கருத்து போல இருக்கிறது என்று, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிபிஎம்மும் எடப்பாடி அழைப்பை நிராகரித்து உள்ளது.
ஸ்டாலினுக்கு போன தகவல்
இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக கூட்டணி கட்சி ஒன்றை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றதாக அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மதிமுக பாஜகவுடன் நெருக்கமாகி வருவதாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதாவது மதிமுகவின் துரை வைகோ பாஜகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் வந்த பின் மல்லை சத்யா ஓரம்கட்டப்பட்டுவிட்டார். இப்போது மல்லை சத்யா - துரை வைகோ மோதல் உச்சம் அடைந்து உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக கூட்டணியை உடைத்துவிட்டு செல்ல துரை வைகோ திட்டமிட்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணி பக்கம் செல்ல திட்டமிட்டதாக உளவுத்துறை மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மதிமுக சீனியர் முத்துரத்தினத்தை திமுகவில் ஸ்டாலின் இணைந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியேறினால் அவர்களை திமுகவில் ஸ்டாலின் இணைக்க மாட்டார். அதை மீறி இந்த முடிவை எடுக்க காரணம்.. மதிமுகவின் திட்டம்தான் என்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தை அறிந்தே மதிமுகவிற்கு ஸ்டாலின் செக் வைத்துள்ளார். பாஜகவுடன் மதிமுக போனால்.. மொத்தமாக அந்த கட்சியே கூட உடையும் அபாயம் இருப்பதை ஸ்டாலின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications