ஆ. ராசா பேச்சு சரியா.. திமுகவுக்கு இதே வேலை.. முதல்வரே, தெளிவுபடுத்துங்க.. ஸ்டாலினை கேட்ட பாஜக வானதி
ஆ ராசா தனித்தமிழ்நாடு குறித்து பேசியதற்கு பாஜக வானதி சீனிவாசன் கொந்தளித்துள்ளார்
சென்னை: ஆ. ராசா, 'பிரிவினை வேண்டும், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்' என்று பேசியிருக்கிறார்.. ராசாவின் பேச்சை முதல்வர் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று பாஜகவின் வானதி சீனிவாசன் காட்டமாக கேட்டுள்ளார்.
Recommended Video
திமுக மூத்த தலைவரும், எம்பியுமான ஆ ராசா, நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசியிருந்தது, தேசிய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கி விட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நேரடியாகவே, முக்கிய கோரிக்கை விடுத்து, ஆ ராசா அந்த கூட்டத்தில் பேசியிருந்தார்.

ஆ. ராசா
ஆ.ராசா பேசும்போது, "எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என்றும் பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்.. நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்

ஜனநாயகம்
பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் அணிந்து கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு' என்று பெரியார் சொன்னார்... பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக, எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு, 'இந்தியா வாழ்க' என்று சொன்னோம். இன்னமும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அமித்ஷா, மோடி
அதனால், பாஜக அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

பாஜக நாராயணன்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக கொந்தளித்துவிட்டது.. பாஜகவின் நாராயணன் திருப்பதி தன்னுடைய ட்வீட்டில், "அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,மாநில சுயாட்சி தாருங்கள்.அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்று முதலமைச்சரை மேடையில் வைத்து கொண்டு வேண்டுமென்றே இந்த பேச்சைப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.. ஈ. வெ.ரா வழி வேறு, அண்ணா வழி வேறு என்று தெளிவாக கூறியிருக்கிறார் ஆ.ராசா. அதாவது, திக பிளவுபட்டது போல் திமுகவும் பிளவுபடும் என்கிறார். இது திமுகவிற்கான மிரட்டல்" என்று கூறியிருந்தார்.

எச்.ராஜா
அதேபோல, அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, "முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால், அவருடைய பேச்சு திமுகவின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும்" என்று கண்டனம் கூறியிருந்தார்.. அதேபோல, தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கண்டனம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "தனி தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள் - ஆ.ராசா... கேட்டுதான் பாருங்களேன்... அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசியலமைப்பு சாசனம் பிரிவு - 356-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படி கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.

வானதி சீனிவாசன்
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு, பாஜக மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாமக்கல்லில் நடந்த, திமுக நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய திமுக. எம்.பி., ராசா, 'பிரிவினை வேண்டும், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனி தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்' என்று பேசினார். திமுக எப்போதும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவே பேசி வருகிறது. தனி தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்றது என்று திமுகவினர் அறிவர்... ராசாவின் பேச்சை முதல்வர் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று காட்டமாக கேட்டுள்ளார்.

வானதி சீனிவாசன்
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு, பாஜக மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: கடந்த 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பேசியுள்ளார்.

ஆ.ராசா
''பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு என்று பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் ‘அண்ணா' வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்" என்று பேசியுள்ளார்.

ஒற்றுமை
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சு இது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா எதையும் தெரியாமல் பேசக் கூடியவர் அல்ல. திமுக எப்போதுமே இந்தியா என்ற நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகவே பேசி வருகிறது. தனித் தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்ற ஒன்று என்பதை திமுகவினர் அறிவார்கள். அதனால்தான், தனித் தமிழ்நாடு கோரிக்கையை திமுக நிறுவனர் அண்ணாதுரை கைவிட்டார்.

குளிர்காயும் திமுக
தமிழக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம். அதற்காகவே, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதன் வழியிலேயே, நாமக்கல்லில் ஆ.ராசா, தனி தமிழ்நாடு என பிரிவினைவாதம் பேசியிருக்கிறார்.

நெருப்புடன் விளையாட வேண்டாம்
இந்தியாவின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் என்பது திமுக அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை திமுகவுக்கு வாக்களிப்பவர்களே ஏற்க மாட்டார்கள். தமிழகம் என்றுமே தேசியத்தின் பக்கம்தான். எனவே, நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆ.ராசாவின் பேச்சை, இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications