அடடே.. திமுக கூட்டணிக்கு வந்த "பெரிய பலம்.." இணைந்தது எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகம்
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் சரத்குமாரின் சமக ஆதரவளித்து உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து உண்மை தகவலை பார்ப்போம்.
இன்று காலை முதல் திமுக கூட்டணிக்கு சமக ஆதரவு என்று தகவல் பரவி வந்தது. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சமக என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த கட்சி கடந்த தேர்தல்களில் பாஜக ஆதரவு கூட்டணியிலேயே இருந்தது. சரத்குமார் மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்ட நிலையில், அவரது கட்சி தொடர்பான தகவல்கள் குறைவாகவே வருகின்றன. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகம் திமுகவை ஆதரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக முரசொலியிலும் செய்தி வெளியாகி இருக்கிறது.

சமத்துவ மக்கள் கழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளடக்கிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்தை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகர் திறந்து வைத்து தீர்மானம் வாசித்தார். தலைமை நிலைய செயலர் தங்கமுத்து வரவேற்புரையை தொடர்ந்து, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராணயன் பேசினார்.
அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கையொப்பம் இயக்கத்திற்கு தனது ஆதரவு பங்களிப்பையும் கூறியும், 10 தீர்மானம் கிடப்பில் போடப்பட்டதற்காக ஆளுநருக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் அனுப்பியதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மத்திய பாஜக அரசு தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு மக்களையும் வஞ்சிக்கிறது. நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும், தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி தொகையை வழங்காமலும் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் தமது ஆதரவை தெரிவித்து 40 க்கு 40 என்ற இலக்குடன் வெற்றிக்கு கழக நிர்வாகிகள் உறுதுணையாக இருக்கும் எனவும் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் கார்த்திக், கொள்கை பரப்புச் செயலாளர் முனிஸ்வரன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், துணைச் செயலாளர்கள் விநாயகமூர்த்தி, காமராசு நாடார், பாலசேகர், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை மாவட்டம் பாஸ்கர், வில்லியம்ஸ், சீனிவாசன் , மத்திய சென்னை மாவட்டம் அருண்குமார், ராஜலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் மதுரை வீரன், விஜயன், சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீராம், கோவை கணேசன், காஞ்சிபுரம் ரமேஷ், கதிர்வேல், செங்கல்பட்டு பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications