Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிப்பிற்கு 3 வருட பிரேக்.. மாபெரும் அரசியல் பிளான்.. பயங்கர முடிவை எடுக்கும் நடிகர் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.

Is Actor Vijay planning to take a break from cinema for 3 year for his political wishes?

இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது. இதில் பேசிய அவர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உன்னில் என்னை காண்பது போல உள்ளது.

படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற வசனம் கவர்ந்தது. படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை, என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எல்லோரும் பேசியதை கேட்டுக்கொண்டு அவர்களுக்கு பதில் அளித்தார். அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். 2 மணி நேரம் அவர் தொடர்ச்சியாக நின்றபடி இருந்தார். ஆனால் பெரிதாக அதை காட்டிக்கொள்ளவில்லை. யார் மீதும் கோபம் அடையவில்லை.

அதேபோல் இடை இடையே சிறிய 2-3 நிமிட பிரேக் எடுத்தால் கூட சாப்பிட கூட போகாமல் 12 மணி நேரம் அப்படியே நின்றபடி அவர் எல்லோரிடமும் பரிசுகளை கொடுத்து போட்டோ எடுத்தார். அவரின் செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அவ்வளவு நேரம் நின்றும் கூட அவர் முகத்தில் கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டாதது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அரசியல்: இந்த மீட்டிங்கே விஜயின் அரசியல் திட்டத்தை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட மீட்டிங் என்று கூறப்பட்டது. தனது ரசிகர்களை தொண்டர்கள் கூட்டமாக மாற்ற, ரசிகர் மன்றத்தை அப்படியே கட்சியாக மாற்ற வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இனி அடிக்கடி ரசிகர்களை விஜய் சந்திப்பார், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.

Is Actor Vijay planning to take a break from cinema for 3 year for his political wishes?

2026ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கொண்டு விஜய் இந்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியும் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்போது கையில் உள்ள படங்களை அவர் விரைவில் முடிப்பார்.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பார். அடுத்த பிப்ரவரிக்குள் நடிப்பை முடித்துவிட்டு பின் 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதை மனதில் வைத்தே வெங்கட்பிரபு படத்திற்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+