அக்னிபாத் முடித்து டாக்டராகலாமா? அண்ணாமலை உளறுகிறார்.. “அந்த” கூட்டம் - திமுக எம்பி கலாநிதி வீராசாமி
சென்னை: அக்னிபாத் முடித்தவருக்கு 12 ஆம் வகுப்பு பாஸ் போட முடியும் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர்கள் மருத்துவம் படிக்க முடியுமா என திமுக எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

யாருக்கு வேலை?
17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் போராட்டம்
இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அண்ணாமலை ஆதரவு
இதனிடையே அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "நமது ஆயுதப்படையே மேலும் வலுப்படுத்தவே அக்னிபாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது ஆயுதப்படையின் தன்மையை இளமையாக்க உதவும். தேசபக்தி மற்றும் துணிச்சலான இளைஞர்களை அக்னிபாத் திட்டம் உருவாக்கும்." என்று கூறியுள்ளார்.

கலாநிதி வீராசாமி காட்டம்
இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து ட்விட்டரில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி பதிவிட்டு உள்ளார். அதில், "அக்னிபாத் அருமையான திட்டம் என்று உளறும் 10 ஆம் வகுப்பு முடித்தவனுக்கு +2 பாஸ் என்று கொடுத்தால் எவ்வளவு மார்க் போடுவீங்க. அவர்கள் மருத்துவர், பொறியியல் போன்ற படிப்புகளில் இதை வைத்து சேரலாமா. பைத்தியக்கார கூட்டம்.." என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications