தவெக "அவுட்".. எடப்பாடியை சந்தித்த கேரளா "புள்ளி".. உருவாகுது வேற கூட்டணி.. அப்போ விஜய்?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் கேரளாவை சேர்ந்த தமிழக புள்ளி ஒருவரின் தலையீடுதான் காரணம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் தலையீடு
இதற்கு பின் கேரளாவை சேர்ந்த தமிழக புள்ளி ஒருவரின் தலையீடுதான் காரணம் என்கிறார்கள். கேரளாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த தமிழர் தான் கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில்தான் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதில் இந்த கூட்டணியை உருவாக்குவதற்கான பாசிட்டிவ் விஷயங்களை எடப்பாடி தெரிவித்து உள்ளாராம். இதனால் பாஜக இன்.. தவெக அவுட் என்கிறார்கள்.
கூட்டணி உருவாகவில்லை
தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எடப்பாடி சர்வே
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பில் பேசி இருக்கிறதாம்.
இதையடுத்தே தமிழக வெற்றிக் கழகத்திற்கு உண்மையில் இவ்வளவு இடங்கள் தர வாக்கு வாங்கி இருக்கிறதா என்று தனியார் அமைப்பு ஒன்றை வைத்து எடப்பாடி சர்வே செய்துள்ளாராம்.
அதில் விஜய்க்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். முக்கியமாக வடக்கு மண்டலத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் விஜய்க்கு வாக்காளர்கள் இல்லை. அதாவது ரசிகர்களாக இருப்பவர்கள் வாக்காளர்களாக மாற விரும்பவில்லை. விஜயின் வாக்கு சதவிகிதம் 10%க்கும் கீழ்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications