ஜோசியர் பேச்சை கேட்ட எடப்பாடி.. அதிமுக அலுவலகத்தில் உண்மையில் நடந்தது என்ன? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி ஜோசியர் ஒருவர் சொல்வதை கேட்டு தொடர்ந்து பணிகளை செய்வதாக புகார்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிவீரராம பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

2024 லோக்சபா தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக கேம்பில் திடீரென சலசலப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.

Is AIADMK Edappadi Palanisamy angry on party cadres AFTER Tamil Nadu Lok Sabha elections 2024

உதாரணமாக நேற்று நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இந்த கூட்டம் பற்றி அந்த கட்சியின் அதிவீரராம பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், அதிமுகவின் இந்த கூட்டம் ஜோதிடர் சொன்னதால் நடந்தது என்று திமுகவினர் சொல்கின்றனர். இதெல்லாம் திமுகவினர் கிளம்பிடும் கட்டுக்கதை. அதெல்லாம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஒரு பொதுச்செயலாளர் கட்சி தலைமையகம் வருவது வழக்கமான விஷயம். நீங்கள் சொல்கிற மாதிரி பிம்பம் எதுவும் இல்லை.

தேர்தல் முடிந்த பின் தேர்தல் கணக்கு வழக்குகளை பார்ப்பார்கள். பணிகளை செய்வார்கள். இப்படி பல விஷயங்களை ஆய்வு செய்வார்கள். இதை எல்லாம் ஆய்வு செய்வது பொதுச்செயலாளரின் வேலை. அதைதான் எடப்பாடி செய்கிறார். எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை கடிந்துகொள்ளவில்லை. நிர்வாகிகளுக்கு எதிராக பேசவில்லை.

தேவையின்றி பொய்யாக செய்திகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதிமுக பற்றியே பேச வேண்டும். அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டும். மற்ற மக்கள் பிரச்சனைகளை பேசி விட கூடாது என்பதால் இப்படி எல்லாம் செய்கிறார்கள். பொதுச்செயலாளர் எல்லாம் தெரிந்தவர். எடப்பாடி பழனிசாமி ஆற்றல் பெற்றவர். அவரிடம் போய் இப்படி எல்லாம் பேச வேண்டியது இல்லை .

அவரை குறைத்து காட்ட நினைக்கிறார்கள். அவர் நிர்வாகவியல் தெரிந்தவர். அவர் அனுபவம் கொண்டவர். கிளாஸ் செயலாளர் பதவியில் இருந்தே வளர்ந்தவர். தனித்த முழு அனுபவத்தோடு வளர்ச்சி அடைந்தவர். அப்படி இருக்க அவரை பற்றி தவறாக பேச தேவை இல்லை. எப்படி இவர் சலசலப்பு இல்லாமல் தேர்தலை முடித்துவிட்டார் என்ற பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

எந்த பிரச்சனையும் இல்லாமல் முறையாக திட்டமிட்டு தேர்தல் நடத்திவிட்டாரே என்ற கேள்வி நிர்வாகிகளுக்கு எழுந்துள்ளது. தேர்தல் பணிகள் எப்படி நடக்கின்றன. தேர்தல் திட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதை எடப்பாடி முறையாக திட்டமிட்டு செய்துள்ளார். அதிமுக தொடர்ந்து தன்னை புனரமைத்துக்கொண்டே இருக்கிறது. எடப்பாடி பற்றி தெரியாமல் யுகங்கள் அடிப்படையில் விமர்சங்களை வைக்கின்றனர்.

எடப்பாடி சிலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். ஜெயலலிதா மாதிரி எடுக்கவில்லை என்கிறார்கள். ஏன் அப்படி எடுக்க வேண்டும். யாரும் தவறு செய்யவில்லை. அவர்கள் தவறு செய்யாமல் எப்படி எடப்பாடி ஆக்சன் எடுப்பார். அதிமுகவின் இந்த கூட்டம் ஜோதிடர் சொன்னதாக நடந்தது என்று திமுகவினர் சொல்கின்றனர். இதெல்லாம் திமுகவினர் கிளம்பிடும் கட்டுக்கதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+