2024 தேர்தலுக்கு பின்.. அதிமுக கேம் ஓவர்! "மேலிடத்திற்கு" போன ரிப்போர்ட்! குஷியில் பாஜக! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கேம் ஓவர் ஆகிவிடும் என்று டெல்லி பாஜகவிற்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த சூட்டோடு சூடாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

Is AIADMK losing its momentum ahead of Lok Sabha 2024? Big report to Delhi

இந்த கோவில் திறப்பு விழா காரணமாக வட மாநிலங்களில் மக்கள் இடையே தீவிர பாஜக ஆதரவு அலை உள்ளது.முக்கியமாக உத்தர பிரதேசம் தொடங்கி பீகார் வரை சில ஹிந்தி மாநிலங்களில் தீவிர பாஜக உணர்வு எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு.. லோக்சபா தேர்தல் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே ஏப்ரல் 16ம் தேதி லோக் சபா தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி இரண்டாம் வாரம் அல்லது 3ம் வாரம் சூட்டோடு சூடாக இந்த தேர்தல் அறிவிப்பு வெளியாகும். 2024 லோக்சபா தேர்தல் பெரும்பாலும் ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட ஆன்மீக விஷயங்களை மையப்படுத்தியே இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

அதிமுக - பாஜக கூட்டணி: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கேம் ஓவர் ஆகிவிடும் என்று டெல்லி பாஜகவிற்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதன்படி அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளதாம்.

1. அயோத்தி விவகாரத்தில் அதிமுக பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. பெரிதாக லைம்லைட்டில் இல்லை.

2. அமைச்சர்கள் கைது விவகாரத்தை கூட அதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கான பணிகள் எதையுமே செய்யவில்லை.

3, நாம் தமிழர் சமூக வலைத்தளங்களில் இருக்கும் அளவிற்கு கூட அதிமுக எந்த பணிகளையும் செய்யவில்லை.

4. பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக தனியாக உள்ளது. மற்ற கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இறங்கி வரவில்லை.

5. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் , விசிக ஆகியவை கூட அதிமுக பின் வரவில்லை. பாமக போன்ற கட்சிகள் கூட அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை.

6. சென்னை வெள்ளம் தொடங்கி திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய விஷயம் எதிலும் எடப்பாடி பெரிதாக அரசியல் செய்யவே இல்லை.

கூட்டணி:இதை பற்றிய ரிப்போர்ட்தான் டெல்லிக்கு சென்றுள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று ரிப்போர்ட் ஒன்று பாஜகவிற்கு சென்றுள்ளதாம். அதாவது பாஜக தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடிக்கும்.. அல்லது திமுகவிற்கு எதிரி என்ற இடத்தை பிடிக்கும் நிலையை அடையும் என்று அந்த ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

அதிமுக இதே நிலை தொடர்ந்தால் அது பாஜகவிற்கு சாதகமாக மாறும் என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம். ஒருவேளை மீண்டும் அதிமுக பாஜக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தால்.. இந்த ரிப்போட்டை பயன்படுத்தி அதிமுகவிற்கு பாஜக செக் வைக்கும் என்கிறார்கள்.

அதாவது உங்களுக்கு பலமே இல்லை.. அதனால் எங்களுக்கு கூடுதல் இடம் கொடுங்கள் என்று பாஜக அதிமுகவிடம் பிரஷர் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+