“டுவிஸ்ட்”.. அண்ணாமலை வீசிய கல்! சல்லி சல்லியா நொறுங்கிய அதிமுக உறவு - “மாஸ்டர் மைண்ட்” அமித்ஷாவா?
சென்னை: அதிமுகவினரை கொந்தளிக்க வைக்கும் அளவுக்கு அண்ணாமலை பேசியதற்கான 2 விசயங்கள் காரணமாக இருக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், "அதிமுகவோடு கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று உள் அரங்கில் பேசிய அண்ணாமலை, அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அமித்ஷா அதிமுக கூட்டணி தொடர்கிறது என்று சொன்னபோது அந்த வாதத்தை மறந்தார்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து டெல்லிக்கு எடப்பாடி, அண்ணாமலையை அழைத்து சமாதானம் பேசும்போது அமைதியாக இருந்த அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று சொன்னபோதுகூட மவுனமாக இருந்த அண்ணாமலை இன்று இழுத்து வைத்து ஜெயலலிதாவை விமர்சித்து இருக்கிறார்.
இது மிக கடுமையாக விமர்சனம். அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு உணர்வுள்ள அதிமுக தொண்டரை சீண்டுவது கூட்டணி தர்மமும் அல்ல. 2 கட்சிக்கும் நல்லதும் அல்ல. நாம் இந்த கல்லை எரிந்தால் என்ன நடக்கும் என்று ஓரளவு தெரிந்துதான் அண்ணாமலை அதை எரிந்து இருக்கிறார். அதற்கு 2 காரணங்கள் இருக்க முடியும்.
முதல் காரணம்: தமிழ்நாடு பாஜகவில் இருந்து அண்ணாமலை மிக விரைவாக நீக்கப்படலாம். அது அண்ணாமலைக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டு இருக்கலாம். ஒரு இளம் போராளியாக ஒரு பட்டத்தோடு வெளியே போகலாம் என்று அண்ணாமலை இந்த வேலையை செய்து இருக்கலாம்.
அல்லது அதிமுக கூட்டணி உறுதி என்று நான் 2 முறை சொல்லிவிட்டேன். அமித்ஷா பாஷையில் சொல்கிறேன். அதை தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வேறு சில கணக்குகள் இருக்கிறது. சத்தமே இல்லாமல் அதிமுகவை கழற்றி விடலாம். இப்படி சொன்னால் அதிமுக கூட்டணி தானாகவே முறிய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் அதை செய்யுங்கள் என்று குட்டியை விட்டு ஆழம் பார்த்து இருக்கலாம். இது எனது யூகம்தான். அர்த்தம் உள்ள யூகம்." என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் தனியார் ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஊழல் செய்து உள்ளன. மக்களின் பணத்தை வைத்து முறைகேடில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளையும் நான் குறிப்பிடுகிறேன். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் நடந்த அனைத்துமே ஊழல் ஆட்சிதான். முன்னாள் முதலமைச்சரே ஊழல் செய்ததால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்." என்று பேசி இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டி ஜெயலலிதாவையே அண்ணாமலை விமர்சிப்பதாக கூறி அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக கண்டித்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் எச்சரித்து இருந்தனர். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
புதுச்சேரியில் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் அண்ணாமலை பேச்சுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜகவினரும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்து வருவதால் இரு தரப்பு கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications