சென்னை வரும் அமித் ஷா.. அதிமுக கூட்டணி மட்டுமல்ல.. சீமானையும் உள்ளே இழுக்க திட்டம்? மெகா கூட்டணி?
சென்னை: சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடியிடம் சீமான் பற்றியும் அமித் ஷா ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வரும் அமித் ஷா.. சீமான் பற்றியும் எடப்பாடியிடம் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா இடையே நடந்த மீட்டிங்கில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம்.

போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது. நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள் என்று அமித் ஷா எடப்பாடியிடம் கூறி உள்ளார்.
இன்று வரும் அமித் ஷா
இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கியமான டாப் எம்எல்ஏக்கள் சிலருக்கு.. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்கு அவர் பிறப்பித்து உள்ளார். அதன்படி 5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி உறுதி
இந்த கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி - அமித் ஷா இறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. நாளையே கூட கூட்டணி பற்றிய இறுதி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறுகிறார்கள்.
சீமானை இணைக்க திட்டம்
அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது என்கிறார்கள். தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா நாளை கூறும் வாய்ப்புகள் உள்ளதாம்.
சீமான் அரசியல்
அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம் உருவாகி வரும் நிலையில்.. இன்னொரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இழுப்பதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு இடையேதான் சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் பரவின. அதேபோல், சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை தற்போது சீமான் மறுத்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று சீமான் மறுத்துள்ளார். இதுவும் கூட பாஜக - நாம் தமிழர் கூட்டணி பற்றிய விவாதங்களை அதிகரித்து உள்ளது.
நாம் தமிழர் ஏன் முக்கியம்
இப்போது இந்த நிலவரப்படி பார்த்தால் தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.
நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8-10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றால்.. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும். அதுவே விஜய் கூட்டணிக்கு போனால்.. விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் ஆக்டிவ் ஆகும் பட்சத்தில் அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications