கூட்டமே வரவில்லை? அண்ணாமலை போராட்ட போட்டோவில் "போட்டோஷாப்"?.. குற்றச்சாட்டு.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பாக நேற்று அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது. ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பலர் இந்த சம்பவம் தொடர்பாக கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

பெட்ரோல்

பெட்ரோல்

கடந்த 2 நாட்களாக பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இதை எதிர்த்து நேற்று பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை போராட்டம்

கோவை போராட்டம்

கோவையில் பாஜக சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாமலை தலைமையில் போராட்டத்திற்கு நேற்று போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. சட்ட ஒழுங்கை காரணம் காட்டி போலீஸ் நேற்று போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போலீஸ் தடை மீறி அண்ணாமலை போராட்டம் செய்தார். இதனால் கோவையில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

 என்ன போட்டோ?

என்ன போட்டோ?

இந்த போராட்டம் தொடர்பான புகைப்படங்களை பாஜக பகிர்ந்து உள்ளது. தமிழ்நாடு பாஜக பகிர்ந்த போட்டோவில், மக்கள் வெள்ளத்திற்கிடையே மேடையை வந்தடைந்தார் நம் மாநில தலைவர் அண்ணாமலை என்று கூறப்பட்டுள்ளது. இந்த போராட்ட புகைப்படம்தான் சர்ச்சையாகி உள்ளது. பாஜக சார்பாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளதாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் புகார் வைத்து உள்ளனர்.

என்ன புகார்?

என்ன புகார்?

அதன்படி இந்த கூட்டத்தில் பின் பக்கம் ஆட்களே இல்லை. ஆனால் அதை பாஜக ஆட்கள் இருப்பது போல் எடிட் செய்துள்ளது. அங்கே இருக்கும் ஆட்களை பார்த்தாலே தெரிகிறது. போட்டோஷாப் மூலம் ஆட்கள் உள்ளே இருப்பது போல அமர வைக்கப்பட்டு உள்ளனர். கூட்டம் குறைவாக இருப்பதால் இப்படி பொய்யாக போட்டோஷாப் செய்துள்ளனர் என்று திமுக, காங்கிரஸ் கட்சியினர் புகார் வைத்து உள்ளனர். இதற்கான இமேஜ் அனாலிசிஸ் போட்டோக்களையும் பகிர்ந்து.. இமேஜில் போட்டோ ஷாப் செய்யப்பட்ட இடங்கள் சிவப்பாக தெரிகிறது பாருங்கள் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+