அண்ணாமலைக்கு முதல் வரிசை! அருகிலேயே உதயநிதியா? என்னங்க சொல்றீங்க? திமுகவா இப்படி? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது நினைவு நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலையில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக அரசு விமர்சியாக செய்திருக்கிறது.

ராஜ்நாத்சிங்கை வரவேற்க சென்னை ஏர்போர்ட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. ப்ரோட்டகால் படி அவர் போகத் தேவையில்லை. சமீபகாலத்தில் இல்லாத ஒரு நிகழ்வாக, இந்த விழாவில் பாஜக தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தனது கூட்டணியில் உள்ள முக்கிய பார்ட்னரான காங்கிரசுக்குக் கூட உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இது, காங்கிரசில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

karunanidhi chennai rajnath singh

கலைவாணர் அரங்கத்தில் தலைவர்களுக்கான சீட் அரேஞ்மெண்டு நேற்று முடிவு செய்யப்பட்டது. இதில் மிக முக்கியமான விசயம், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்த வரிசையில் இடம் ஒதுக்குவது என்பது பெரிய விவாதம் நடந்துள்ளது. இறுதியில், முதல் வரிசையில் அண்ணாமலைக்கு இடம் ஒதுக்க முடிவாகி அதன்படி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாமலைக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கிய நிலையில், பாஜகவின் மாநில நிர்வாகிகளாக உள்ள 6 முக்கிய தலைவர்களுக்கு இரண்டாம் வரிசையில் தமிழக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களை அமர வைக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முதல்வரிசையில் உதயநிதி ஸ்டாலின் அமரவிருக்கிறார்.

அவருக்கு அருகில் அண்ணாமலையை உட்கார வைக்கலாமா? என்ற ஆலோசனையும் நடந்துள்ளது. இதில் மட்டும் இன்று காலை வரை தீர்க்கமான முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. முதல்வரிசையில் உதயநிதியும் அண்ணாமலையும் அருகருகே அமரும் வகையில் சீட் அரேஞ்மென்ட் இருக்குமா? என்ற கேள்வி திமுகவிலும் பாஜகவில் முக்கிய விசயமாக எதுரொலித்தபடி இருக்கிறது.

தயார் நிலையில் போலீஸ்: இன்று நடக்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் ஆலோசனைக் குறிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை இன்று சென்னையில் வெளியிடுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துகிறார் ராஜ்நாத் சிங்.

இன்று நடக்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் ஆலோசனைக் குறிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை. நேப்பியர் பாலம். வாலாஜா சாலை. அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை. அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

3. கலைவாணர் அரங்கம். கலைஞர் நினைவிடம். வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம். PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

5. பெரியார் சிலை. சுவாமி சிவானந்தா சாலை. எம்எல்ஏ விடுதி சாலை. ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.
6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை. போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+