ராஜ்ய சபா எம்பி.. அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட உத்திரவாதம்.. மொத்தமாக எல்லாமே மாறுதாமே.. ட்விஸ்ட்
சென்னை; அண்ணாமலை ஒரு தலைவராக நிலையாக பேச வேண்டும். அவர் தன்னை தானே ஜெயலலிதா, கலைஞர் போன்ற தலைவர் என்று சொல்கிறார். அவர் தன்னை தானே சொல்லிக்கொள்ள கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் பாஜக கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன், என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலையின் செயல்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலை ஒரு தலைவராக நிலையாக பேச வேண்டும். அவர் தன்னை தானே ஜெயலலிதா, கலைஞர் போன்ற தலைவர் என்று சொல்கிறார். அவர் தன்னை தானே சொல்லிக்கொள்ள கூடாது. பொன்னார் போன்ற மூத்த தலைவர்கள் இதை சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல வேண்டும். அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அவருக்கு 3 வருடம் தலைவர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என்ற உத்திரவாதத்துடன்தான் பாஜகவிற்கு வந்தார். இப்போது அவரின் தலைவர் பதவி மீது விமர்சனம் உள்ள நிலையில் ராஜ்ய சபா வழியாக அவர் அமைச்சர் ஆகலாம்.

கர்நாடகா
கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார்.அங்கே பாஜக வென்றால்.. ஒருவேளை வென்றால்.. அதற்கு தான்தான் காரணம் என்று அண்ணாமலை கூற வாய்ப்பு உள்ளது. இதன் ராஜ்ய சபாவிற்கு கர்நாடகாவில் இருந்து அவர் செல்ல வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் அமைச்சர் ஆகலாம். ஆனால் இதற்கு அங்கே பாஜக வெல்ல வேண்டும். அண்ணாமலை அறியாமல் இருக்கிறார். அதனால்தான் அவரின் தலைவர் பதவி மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. தனக்கு எதிராக நிர்வாகிகள் திரும்பி விடுவார்கள் என்று அண்ணாமலை நினைக்கிறார்.,

பாஜக
பாஜகவில் தமிழிசைக்கு நெருக்கடி இருந்தது, இல கணேசனுக்கும் நெருக்கடி இருந்தது.. எல் முருகனுக்கும் நெருக்கடி இருந்தது. இதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்களோ அதை பொறுத்தே தலைமைத்துவம் இருக்கும். கட்சி நிதியை எப்படி பயன்படுத்துவது, சீனியர்களை எப்படி நடத்த வேண்டும் என்று அண்ணாமலைக்கு தெரியவில்லை. அண்ணாமலை ஒரு போலீஸ். அவரின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது. கட்சியை வளர்க்க ஐடி விங் அமைக்கலாம். ஆனால் இவர்கள் வார் ரூம் அமைத்து உள்ளனர். போர், பேரிடர் காலங்களில்தான் வார் ரூம் அமைப்பார்கள். ஆனால் இப்போதே அண்ணாமலை வார் ரூம் அமைத்து உள்ளார்.

குழு
அவர் தனது குழுவிற்கு வைத்து இருக்கும் பெயரை பாருங்கள். வார் ரூம் பெயரை கேட்கவே ஷாக்காக இருக்கிறது. நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததும் பதிலடியாக இவர் சில நிர்வாகிகளை சேர்க்கிறார்கள். இதுதான் போலீஸ்தனம். போலீஸ் பதிலுக்கு பதில் அடிப்பது போல செய்கிறார்கள். எடப்பாடி உருவபொம்மையை அண்ணாமலையின் அனுமதி இன்றி எரித்து இருக்க மாட்டார்கள். அண்ணாமலை இப்படி பதிலுக்கு பதில் செயல்பட்டால் கட்சி எப்படி வளரும் . தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு வாக்குகள் இருக்கின்றன. திமுகவை கண்மூடித்தனமாக எதிர்க்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் ஓரளவிற்கு விவரம் தெரிந்த தலைவர்கள் இருக்கிறார்கள்.

அறிவு
இந்த கூட்டத்தில் ஓரளவு அறிவு படைத்த தலைவர்கள் முதலில் அண்ணாமலையை ஆதரித்தனர். ஆனால் இப்போது அண்ணாமலையை இவர்கள் நம்புவது இல்லை. பாஜகவளர்ந்துவிட்டது என்று அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் வளர்ந்ததை எப்படி நிரூபிப்பார்கள் என்று சொல்லுங்கள். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். அவர் கொள்கைவாதியாக இருந்தால் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் செய்வாரா என்பது சந்தேகம். அவர் அரசியல்வாதிதான். அதைதான் செய்வார், என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications