பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்குவார் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னதுதான் மிச்சம்.. பாஜக தரப்பில் பலர் குஷியில் இருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் தகிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு, மே 4-ம் தேதி முடிவுகள் என தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழலத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 'வேட்பாளர்கள் யார்?' என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தேடும் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

tamil nadu assembly elections 2026 Annamalai

கமலாலயத்தில் நீண்ட ஆலோசனை!

நேற்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தலைமையில் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் என தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்தப் பெட்டிஷனில் ஆஜராகி இருந்தனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முன்னாள் மாநிலத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக ஒரு பக்கம் முணுமுணுப்புகள் கேட்டாலும், முக்கியமாக அண்ணாமலைக்கு அதிமுக கூட்டணி இஷ்டமில்லை என்று கூறப்பட்டாலும்.. அதையெல்லாம் தற்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு வேட்பாளர் தேர்விலேயே முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது மேலிடம்.

ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பெயர்கள்!

நேற்று ஆலோசனை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், வேட்பாளர் தேர்வு குறித்து சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்:

"ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விரிவாகப் பேசியுள்ளோம். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளோம். இந்தப் பட்டியல் அகில இந்தியத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்

பட்டியலில் அனைவரது பெயருமே இருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது; இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என 'சஸ்பென்ஸ்' வைத்தார். கடைசியில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாணாமலை பெயர் இருக்கும், அண்ணாமலைக்கு எந்த தொகுதி என தற்போது அறிவிக்க முடியாது தகுதியான வேட்பாளர்களை பாஜக தலைமை தேர்வு செய்யும்; ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று நயினார் உறுதி செய்தார்.

அண்ணாமலை இறங்கி வருகிறார்?

தேர்தல் களத்தில் போட்டியிடத் தயக்கம் காட்டி வரும் அண்ணாமலையைச் சம்மதிக்க வைக்கும் அசைன்மென்ட் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டெல்லி அரசியலில் 'க்ரைசிஸ் மேனேஜர்' என்று பெயரெடுத்த பியூஷ் கோயல், எப்பேர்ப்பட்ட பிடிவாதம் உள்ளவர்களையும் தனது சாதுர்யமான பேச்சால் சரிக்கட்டி விடக்கூடியவர்.

நேற்றைய ஆலோசனையின் போது, அவசரமாக புதுச்சேரியில் இருந்து அண்ணாமலையை சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரவழைத்தார். அண்ணாமலையிடம் அவர் தனியாகப் பேசியதாகவும், தமிழகத்தில் கட்சி வலுவாக இருப்பதைக் காட்ட அண்ணாமலை போன்ற ஆளுமைகள் களமிறங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பியூஷ் கோயலின் இந்த 'கன்வின்சிங்' பாலிசி பலன் அளித்தால், கடைசி நேரத்தில் அண்ணாமலையின் மனநிலை மாறி, அவர் தேர்தல் களத்தில் வேட்பாளராக குதிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கமலாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+