உடைகிறது அதிமுக-பாஜக கூட்டணி? அமர் பிரசாத் அட்டாக்! நிர்மலை எடப்பாடி தூக்கியதால் அண்ணாமலை அப்செட்டா?
அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: ஆங்கிலத்தில் "Fight is wide open" என்றொரு பதம் உண்டு.. ஒரு மோதல் முச்சந்திக்கு வந்துவிட்டால் இப்படி கூறுவார்கள்.. தற்போது பாஜக - அதிமுக இடையிலான மோதல்தான் முச்சந்திக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
அதிமுக - பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்கள் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவை சிவி சண்முகம் விமர்சனம் செய்து இருந்தார்.
சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முறிகிறதா.. பாஜகவை கழற்றிவிட எடப்பாடி முடிவு செய்து உள்ளாரோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

பதில்
இந்த பேச்சை எடப்பாடி ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அதன்பின் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறினார். ஆனால் இந்த கூட்டணியில் பாஜக தொடருமா என்று சொல்லவில்லை. முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் முடிந்த அளவு பாஜகவுடன் நெருக்கம் காட்டாமல் இருந்தார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறினார். மற்றபடி வேறு எங்கும் பாஜகவுடன் தான் நெருக்கமாக இருப்பதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை.

மோதல் உச்சம்
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். அதிமுகவிற்கு சின்னம் கிடைத்தும், அமமுக, ஓபிஎஸ் தரப்பு போட்டியிடவில்லை என்ற போதிலும் கூட எடப்பாடி தரப்பு படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை ஒற்றை தலைமை குறித்து பேச தொடங்கினார், அதில், இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டது. அதிமுக ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்சினை எழுந்தது.

முன்பே சொன்னோம்
இதை நாங்கள் முன்பே சொன்னோம். ஆனால் எங்கள் மீது கோபம் அடைந்தனர். இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. மேலும் ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது, என்று அண்ணாமலை கூறி இருந்தார். அவர் ஒற்றை தலைமைக்கு எதிராக பேசுகிறாரே என்ற கேள்விகளை எழுப்பியது.

பாஜக
இந்த நிலையில்தான் பாஜகவில் இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இவர் அதிமுகவில் இணைந்தார். இதில் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், அண்ணாமலையை கடுமையாக தாக்கிவிட்டு பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் இணைந்துள்ளார். கூட்டணியில் இருந்தே எடப்பாடி ஆளை தூக்கி இருக்கிறார் என்பதை தாண்டி, கூட்டணி கட்சி தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த நிர்மலை கட்சியில் இணைத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது பாஜகவுக்கு அதிமுக கொடுக்கும் மற்றும் ஒரு மெசேஜாக பார்க்கப்படுகிறது.

பதிலடி
இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?
இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மோதல் உச்சம்
அமர் பிரசாத் ரெட்டியின் இந்த கருத்தால் அதிமுகவில் ஏற்கனவே உச்சத்தில் இருந்த மோதல் தற்போது புதிய உயரம் தொட்டு இருக்கிறது. முன்பு சொன்னது போல அதிமுகவில் "Fight is wide open" என்ற நிலையை எட்டி உள்ளது. அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலையின் அனுமதி இன்றி இப்படி போஸ்ட் செய்து இருக்க வாய்ப்பே இல்லை. இதனால் பாஜக - அதிமுக இடையிலான மோதல்தான் முச்சந்திக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications