சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனிதான் சிக்கலே.. அதிரடி லிஸ்ட்டை கையில் எடுத்த பாஜக.. மிரண்டு போன அதிமுக.. என்னாகும்?

38 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது தமிழக பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு உத்தேச பட்டியலை வெளியிட்டு அடுத்த குழப்பத்தை துவக்கி வைத்துள்ளது தமிழக பாஜக!

தமிழக பாஜக தலைமை, 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.. அதற்கான வேட்பாளர்களின் லிஸ்ட் ஒன்றையும் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த லிஸ்ட்டில், முக்கிய வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கொளத்தூர் தொகுதியில் அதாவது திமுக தலைவர் முக ஸ்டாலினின் தொகுதியில் ஏஎன்எஸ் பிரசாத் என்பவர் வேட்பாளராக இடம்பெற்றுள்ளார்.. அதேபோல, தினம் தினம் உதயநிதிக்கு கலக்கத்தை தந்துவரும் குஷ்பு அதே சேப்பாக்கம் - திருவல்லிகேணியில் இடம்பிடித்துள்ளார்.

மறுபடியும் முதல்ல இருந்தா.. சென்னை வரும் அமித்ஷா.. இந்த முறையாவது மறுபடியும் முதல்ல இருந்தா.. சென்னை வரும் அமித்ஷா.. இந்த முறையாவது "அவரை" பார்ப்பாரா? ஆதரவு கோருவாரா?

 விபி துரைசாமி

விபி துரைசாமி

திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் தி.நகர் தொகுதியில் எச்.ராஜா உள்ளார்.. மயிலாப்பூர் தொகுதியில் கரு.நாகராஜன் இடம்பெற்றுள்ளார்.. திமுகவில் இருந்து சென்ற விபி துரைசாமிக்கு ராசிபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.. தனக்குதான் கோவையை தர வேண்டும் என்று கடந்த எம்பி தேர்தலின்போதே கேட்டு கொண்டிருந்த வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியே கிடைத்துள்ளது போல தெரிகிறது.. இதெல்லாம் ஒரு உத்தேச பட்டியல்தான்.. என்றாலும் இந்த லிஸ்ட்டானது திமுக, அதிமுக இரு தரப்புக்குமே சிக்கலை தந்துள்ளது.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

அந்த பட்டியலில் பெரும்பாலும் திமுகவை குறி வைத்தே பாஜக வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது அப்பட்டமாக தெரியவருகிறது.. ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வந்துவிடக்கூடாது என்ற கங்கணம் கட்டி வரும் பாஜகவின் நோக்கமும், இந்த லிஸ்ட்டில் முக்கிய தொகுதிகளை பெரும் தலைவர்களுக்கு ஒதுக்கியுள்ளதன் மூலம் வெளிப்படுகிறது.

அறிவிப்பு

அறிவிப்பு

அதேசமயம், முதல்வர் வேட்பாளரை கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என்று 2 மாசமாக குழப்பி கொண்டிருக்கும் பாஜக, அனைவரையும் முந்தி கொண்டு இந்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது அதிமுகவுக்கே சற்று ஷாக்தான்.. 60 சீட் கேட்டு, பிறகு 40 சீட் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், 38 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுகவுக்கு அடுத்தஷாக்.. இப்படி கூட்டணி உறுதி செய்வதற்கு முன்பு, சீட்கள் முடிவாவதற்கு முன்பு, தொகுதிகளை பிரித்து தருவதற்கு முன்பு, 38 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அடுத்த ஷாக்.

பாமக

பாமக

இப்போதைக்கு பாஜகவைவிட பாமகவைதான் அதிமுக அதிகம் நம்பி கொண்டிருக்கிறது.. சீட்டுகளை சற்று அதிகமாக தந்தாலும் பாமகவுக்குதான் தர வேண்டி வரும்.. வட மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பாமக வலுவாக உள்ளதால், அந்த வாக்குகளை சிதறாமல் அள்ள அதிமுக யோசித்து வருகிறது.. அப்படி இருக்கும்போது, பாஜகவே 38 சீட் என்றால், பாமவுக்கு எப்படியும் 40 தந்தாக வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும்.

 கட்சிகள்

கட்சிகள்

இந்த கட்சிகளுக்கே இவ்வளவு என்றால், அதற்கு இணையாக எங்களுக்கும் வேண்டும் என்று தேமுதிக கட்டாயம் கேட்கும்.. திமுக ஒரு பக்கம் உதயசூரியன் சின்னத்திலேயே பிரதானமாக போட்டியிட முடிவு செய்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகள் இப்படி முடிவுகளை எடுத்து கொண்டிருப்பது அதிமுகவுக்கு மேலும் மேலும் சிக்கலை தருவதாகவே உள்ளது!

English summary
Is BJP contesting in 38 constituencies, what will AIADMK do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X