ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. காலையிலேயே ரொம்ப பிஸி.. ஸ்வீட் ரெடியாகிட்டு இருக்கு! மீண்டும் வருது தாமரை?
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், பாஜகவினர் தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் முன்கூட்டியே ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டார்கள்.
லோக்சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது.. இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நடைபெற்றது.

எதிரிக்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு வலுவான போட்டியை வழங்கும் வகையில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது... எனவே, தேசிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பத்திலிருந்தே தொற்றிக்கொண்டன.. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதல் தேர்தல் பிரச்சாரங்கள்வரை, அதன்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் களம் அனலடித்தது..
இந்நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் தேர்தல் முடிவுகளை நோக்கியே குவிந்துள்ளன...
வழிபாடுகள்: எனவே, பா.ஜ.க வேட்பாளர்களும், நிர்வாகிகளும் காலையிலேயே சிறப்பு வழிபாட்டில் ஈடுபட துவங்கிவிட்டனர்.. உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் பாஜக எம்பியும், வேட்பாளருமான ரவி கிஷன் பஞ்சமுகி அனுமான் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
அதேபோல, பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜகவினர் பூஜை செய்தனர்.பா.ஜ.க. வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் டெல்லியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். கௌரி சங்கர் கோவிலில் சாந்தினி சௌக் தொகுதி பாஜக வேட்பாளர் பிரவீன் கண்டேல்வால் பிரார்த்தனை செய்தார். இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும், பாஜக நிர்வாகிகள் காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
எக்ஸிட் போல்: அதேபோல, தேர்தல் முடிவுகள் வெளியானதுமே அதன் வெற்றியைக் கொண்டாட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்றே ஆரம்பமாகிவிட்டது.. காரணம், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது.. அதிலும், எக்ஸிட் போல்களில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சி பீடத்தில் அமரும் என்று கணிப்புகள் வெளியாகியிருந்தன.
இது பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தையும், தெம்பையும் தந்துவருகிறது.. அதற்கேற்றவாறு இன்று காலை 8 மணியிலிருந்தே, தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதிலும் பாஜகவே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
குஷியில் பாஜக: எப்படியும் பாஜகவே 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்பதால், பாஜகவின் வெற்றியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, பூரி, பூந்தி உள்ளிட்ட வகைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ரிசல்ட் வெளியானதுமே, இந்த இனிப்புகள் பாஜகவினருக்கு வழங்கப்பட உள்ளதாம்..!!!
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications