நோட் பண்ணீங்களா? இறங்கி வந்த பாஜக! திமுகவிற்கு "சங்கர்" தந்த கிரீன் சிக்னல்! அப்போ எல்லாம் சுபம்?
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிடம் இத்தனை நாட்களாக முரண்டு பிடித்துக்கொண்டு இருந்த மத்திய பாஜக தற்போது சட்டென கொஞ்சம் இறங்கி வந்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கு, மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடந்த ஒரு வருடமாக மிக கடுமையான மோதல் நிலவி வருகிறது. மே 7ம் தேதி தொடங்கிய இந்த மோதல் கேஜிஎப் பார்ட் 2 ஆக்சன் போல நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது.
ஒரு பக்கம் அதிரா.. இன்னொரு பக்கம் ராக்கி என்று தற்போது மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில்தான்.. திடீரென இண்டர்வல் பிளாக்கிலேயே சுபம் போட்டு பிரச்சனையை முடிக்க மத்திய பாஜக முயன்று வருகிறதாம்.

பாஜக
திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையில் பல விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது. நீட் மசோதா, இதற்காக சென்ற தமிழக எம்பிக்களை கூட அமித் ஷா காக்க வைத்தது, இந்தி திணிப்பு விவகாரம், ஆளுநரை வைத்து அழுத்தம் கொடுப்பது, 12 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு அனுப்பாதது, தமிழ்நாட்டில் அண்ணாமலை திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைப்பது என்று பாஜக திமுக இடையில் மோதல் உச்சத்தில் உள்ளது.

இலங்கை
இதில் இலங்கை விவகாரமும் தலை தூக்கியது. அதாவது இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அங்கு இருக்கும் மக்களுக்கு உதவ மாநில திமுக அரசு முடிவு செய்தது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இலங்கையில் இருந்து அகதிகள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ எங்களை அனுமதியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை மேல் கோரிக்கை
முதலில் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். அதன்பின் பல முறை இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், கடிதங்களில், ட்விட்டரிலும் கோரிக்கை வைத்து வந்தார். இந்த விவகாரமும் திமுக - பாஜக இடையே மோதலாக உருவெடுத்தது. திமுகவை அப்போது விமர்சனம் செய்த பாஜகவினர் சிலர்.. மத்திய அரசே இலங்கைக்கு உதவுகிறது.. அப்பறம் ஏன் மாநில அரசு உதவ வேண்டும். பாஜக செய்யும் உதவிக்கான கிரெட்டிட்டை திருட திமுக பார்க்கிறது என்று விமர்சனங்களை வைத்து வந்தனர்.

விமர்சனம்
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கவும் மாநில நிர்வாகிகளுக்கு மத்திய அரசு முழு உரிமை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - இலங்கை இடையிலான உறவு என்பது இரண்டு நாட்டு விவகாரம் என்பதால் இதில் மாநில அரசை அனுமதிக்காமல் இருந்தது பாஜக. இந்த நிலையில்தான் திடீரென பாஜக இறங்கி வந்து தமிழ்நாடு அரசின் உதவிகளை இலங்கைக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

தீர்மானம்
இந்த தீர்மானத்தை ஏற்று திடீரென பாஜக இறங்கி வந்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்றுள்ளார்.தமிழ்நாடு அரசு அனுப்பும் நிவாரண பொருட்களை நாங்கள் ஏற்கிறோம். அதை இலங்கைக்கு கொடுக்கிறோம். தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இதற்கு பின் 2 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சுபம்
அதன்படி ஒன்று எல்லோரும் எதிர்பார்த்தது போல குடியரசுத் தலைவர் தேர்தல்.. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 48.8 சதவிகித வாக்குகளே உள்ளன. அவர்களுக்கு 51 சதவிகித வாக்குகள் தேவை. இதனால் பாஜகவிற்கு தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல், தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவு தேவை. இதில் திமுகவின் ஆதரவை பெறும் வகையில்தான் இந்த சமாதான தூது சங்கர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இன்னும் பல
இது தொடக்கம்தான்.. இன்னும் சில விஷயங்களில் திமுகவிற்கு ஆதரவாக பாஜக இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். நீட் போன்ற விவகாரங்கள் இதனால் தீர்ந்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம். இது ஒரு பக்கம் இருக்க திமுகவும் சில விஷயங்களில் பாஜகவிற்கு ஆதரவாக போனாலும் போகலாம் என்கிறார்கள். இரண்டாவது விஷயம்.. மத்தியில் பாஜக கொண்டு வரப்போகும் இன்னொரு மசோதாவிற்கு ராஜ்ய சபாவில் திமுகவின் ஆதரவை பாஜக கேட்க போகிறது. அங்கு என்டிஏவிற்கு பெரும்பான்மை இருந்தாலும்.. முக்கிய மசோதா ஒன்றிற்கு திமுக ஆதரவையும் மத்திய பாஜக கேட்க திட்டமிட்டுள்ளதாம்.

அண்ணாமலையை அனுப்பியது ஏன்?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாநில அரசு ஒன்று இலங்கைக்கு உதவிகளை வழங்குகிறது என்பதை மத்திய பாஜக அரசு அவ்வளவு விரும்பாது. இலங்கையில் இருக்கும் தமிழர்களிடம் திமுக மீது சாப்ட் கார்னர் உருவாக இது காரணமாக அமைந்துவிடும்... அரசியல் ரீதியாக இதில் சில சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான் ஒரு பக்கம் திமுக அரசு கொடுக்கும் நிவாரணங்களை ஏற்றுக்கொண்டு, இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையை வைத்து இலங்கை தமிழ் தலைவர்களை சந்திக்க வைத்து உள்ளனராம். பிரதமர் மோடியை கொண்டு வரும் சஞ்சீவி மலை மூலமே உங்களுக்கு உதவிகள் வருகின்றன.. பாஜகவே உங்களுக்கு உதவுகிறது.. என்பதை அழுத்தம் திருத்தமாக இலங்கை தமிழர்களிடம் பதிவு செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications