சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி
கோவை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அண்ணாமலை விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அண்ணாமலையை சமாதானம் செய்யும் வகையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர் பேட்மிண்டன் மைதானத்துக்கே சென்று அவருடன் விளையாடி உள்ளார். இதுதொடர்பான போட்டோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, தகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என்று பாஜகவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அப்செட்டாகி உள்ளார். அண்ணாமலை கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகியவற்றில் ஒன்றில் போட்டியிட காய் நகர்த்தினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. கோவை வடக்கு தொகுதியை மட்டுமே வழங்கியது. அதிலும் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
இதனால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளார். அதோடு அண்ணாமலை கடும் அப்செட்டில் உள்ளார். அதாவது அண்ணாமலை வரும் சட்டசபை தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் அது பாஜக - திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் பலனளிக்கும். ஆனால் அண்ணாமலை தற்போது போட்டியில் இருந்து விலகி உள்ளார். பாஜக சார்பில் இன்னும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக மேலிடம் களமிறங்கி உள்ளது. இதற்காக பாஜக மேலிடம் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள நபர் தான் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். இவர் தமிழக சட்டசபை தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் தான் அண்ணாமலை கோவையில் பேட்மிண்டன் விளையாடிய நிலையில் அந்த மைதானத்துக்கே அவர் தேடிச்சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் அங்கு சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி உள்ளனர். அதன்பிறகு அர்ஜுன் ராம் மேக்வால், அண்ணாமலையிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தான் அர்ஜுன் ராம் மேக்வால் உடன் பேட்மிண்டன் விளையாடிய போட்டோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''உடல் அசைவு, வியர்வை மற்றும் அதிரடி உள்ளிட்டவற்றிற்கு பேட்மிண்டனுக்கு ஈடு வேறு எதுவும் இல்லை.
கோவையில் மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எங்களுடன் சேர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக அமைந்தது'' என கூறியுள்ளார். இப்படி அண்ணாமலையை சமதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ள நிலையில் அவர் சமதானாம் ஆவாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக












Click it and Unblock the Notifications