சென்னையில் வெள்ளம் அபாயம்? டிசம்பர் 1 வரை மழைக்கு இருக்கு போல.. இங்கெல்லாம் இன்னைக்கும் செம மழை
சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் பேசும்போது, "தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வலுப்பெறும் மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலவரப்படி மலேஷியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.

இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது, மேலும் அதே திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும்.
குமரிக்கடல் - கீழடுக்கு சுழற்சி
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதில், அந்தமான் அருகில் காணப்படும் சுழற்சி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இணைந்து, வலுவான புயலாக மாறுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
ஒரு வாரம் கனமழை இன்று அல்லது நாளை இதில் முன்னேற்றம் என்ன என்பது தெரிந்து விடும். எனினும், தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை தொடரும்.
அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகையில் மிக கனமழையும், 29 ஆம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மிக கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும், துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 29ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.
காலை 10 மணி வரை மழை
இந்நிலையில், காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்களுக்கு மழை உள்ளதாக அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது..
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி (மலைப் பகுதிகள்) ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
சென்னைக்கு வெள்ளம்?
இதனிடையே, தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வக்குமார் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் நவ.28 முதல் டிச.1 வரை தொடர் மழைபெய்யக் கூடும் என்றும் இதனால் பெரும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இலங்கைக்கு தெற்கு, தென்மேற்கு பகுதி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் உள்ள காற்று சுழற்சிகள் இலங்கையின் தென்கிழக்கு முனையை ஒட்டி இன்று தாழ்வுப்பகுதியாகி, அதே இடத்தில் நீடித்து, தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து மிகமிக மெதுவாக இலங்கையின் கிழக்கு கரையை ஒட்டி நாளை முதல் 28ம் தேதி வரை வடக்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த இலங்கைக்கும் வரலாறு காணாத கடும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
டிசம்பர் 1 வரை மழை
இதனால், நவம்பர் 26 பிற்பகல் முதல் டெல்டா மற்றும் தென் கடலோரத்தில் லேசான மழையாக தொடங்கும். 27-ம் தேதி டெல்டாவில் மழை சற்று தீவிரம் அடைந்து, 28, 29, 30 ஆகிய தேதிகளில் டெல்டா, சென்னை, திருவள்ளூர் வரை வடகடலோரப் பகுதிகளுக்கு தொடர் மழையை தரும்.. இதனால் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக் கூடும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிச.1ம் தேதியும் மழை தொடர வாய்ப்புள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications