1 வருஷம் ஓவர்.. ஸ்டாலின் போடும் முக்கிய மீட்டிங்? மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. மேலும் பலர் சேர்ப்பு?
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்பி உள்ளார். சென்னை திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் வரும் நாட்களில் முக்கியமான பல மீட்டிங்குகளை, ஆய்வு கூட்டங்களை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த நிலையில் 3 முக்கியமான ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளாராம். கடந்த 2 வாரம் தமிழக அரசியலில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஏற்பட்ட மாற்றங்கள், கட்சி ரீதியாக நிலவிய பிரச்சனைகள் என்று பல விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய உள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க இரண்டாவதாக அமைச்சரவை மாற்றம் பற்றி முதல்வர் ஸ்டாலின் முக்கியமான பல ஆலோசனைகளை செய்வார். முக்கியமாக இளம் எம்எல்ஏக்கள் சிலரை அமைச்சாரக்கும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மீட்டிங் போடுவார் என்று கூறப்படுகிறது.
இது போக அதிகாரிகள் மட்டத்தில் பல ஆலோசனைகளை செய்வார் என்று கூறப்படுகிறது. அதாவது பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அவர் அதிகாரிகள் வட்டத்தில் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதில் ஒரு கட்டமாக மகளிர் உரிமை தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு 1 வருடம் முடிந்துவிட்டது. இதையடுத்து இந்த திட்டத்தின் ஆய்வு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம், தற்போது எந்த அளவிற்கு திட்டம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது, இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எல்லாம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்: இதனால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது இந்த திட்டத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அரசு, கார்ப்பரேஷன் வேலையில் உள்ள பெண்கள் தவிர, மற்ற எல்லோருக்கும் இந்த பணம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.. ஆனால் இதற்காக மகளிர் தற்போது புதிதாக யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று அரசு தரப்பு வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன.
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைதளத்தில் பரவிய வதந்தியை நம்பி வேண்டாம். பெண்கள் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டாம். ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது .
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள்,.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில மாதங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications