துணிஞ்சிட்டாரோ! எடப்பாடி மீது அமித் ஷா அப்செட்? இவர்தான் சொன்னதை கேட்பார்! ஓபிஎஸ்ஸிடம் சாயும் பாஜக?
சென்னை: எப்படி பேசினார்.. இப்படி எல்லாம் பேச மாட்டாரே.. ஏன் இப்படி சொன்னாரு.. எடப்பாடி பேச்சை கேட்ட பாஜகவின் டாப் நிர்வாகிகள் பலர் இப்படித்தான் விவாதித்து வருகிறார்களாம். அமித் ஷா வரும் போதெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி சொன்னதுதான் இந்த பரபரப்பிற்கு காரணம்.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்த போது கூட எடப்பாடி இப்படி பேசியது இல்லையே என்று அவரின் பேச்சை பாஜக நிர்வாகிகள் ஆச்சர்யமாக பார்க்க தொடங்கி இருக்கிறார்களாம். கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அமித் ஷாவிற்கு கை கொடுத்து ஓ பன்னீர்செல்வம் மரியாதை செய்தார்.

மரியாதை
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்பட்டன.
1. மோடியை அழைக்க சென்ற போது தன்னுடன் ஓ பன்னீர்செல்வமும் அழைக்கப்பட்டதை எடப்பாடிவிரும்பவில்லை . இதனால் எடப்பாடி அப்செட்டில் இருந்தார். மறுபடியும் ஓ பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அமித் ஷாவையும் சந்திக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
2. அமித் ஷா எடப்பாடியை தனியாக சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. இதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

மறுப்பு
ஆனால் எடப்பாடி பழனிசாமி இரண்டு செய்திகளையும் மறுத்து உள்ளார். மாறாக.. அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

விளக்கம்
எடப்பாடி பழனிசாமி கொடுத்த இந்த விளக்கத்தைதான் பாஜக எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி எடுத்தெறிந்து பேசுவதை பாஜக தரப்பு ரசிக்கவில்லையாம். எடப்பாடி மிகவும் துணிச்சலாக பேசி இருக்கிறாரே. பாஜகவை எதிர்கிறாரோ என்று டெல்லி தரப்பு நினைக்க தொடங்கி உள்ளதாம்.அதோடு எடப்பாடி - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகளையும் எடப்பாடி ரசிக்கவில்லை என்கிறார்கள்.

ரசிக்கவில்லை
அதே சமயம் ஓ பன்னீர்செல்வம் சொன்னதை எல்லாம் கேட்கிறார். அவர்தான் தர்ம யுத்தம் மூலம் எல்லாத்தையும் தொடங்கி வைத்தார். அப்போதில் இருந்தே அவர் சொன்னதை எல்லாமே கேட்கிறார். இப்போது பதவி இல்லை என்றாலும் கூட அவர் டெல்லிக்கு மரியாதை கொடுக்கிறார் என்று ஓ பன்னீர்செல்வம் மீது நன்மதிப்பு டெல்லி பாஜக தரப்பிற்கு ஏற்பட்டு இருக்கிறதாம். இதனால் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் டெல்லி பாஜக சாய்ந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆச்சர்யம்
ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ.. அண்ணன் யாரையும் எதிர்க்கவில்லை. பாஜகவுடன் நட்பாகவே இருக்கிறார். அதனால்தான் மோடியை பார்த்தார். அமித் ஷா தனியார் நிகழ்விற்காக வந்தார். அதனால் அவரை போய் பார்க்க வேண்டியது இல்லை. 2 மாதம் முன்புதான் பார்த்தோம் என்பதால் பார்க்க வேண்டியது இல்லை என்ற அர்த்தத்தில்தான் எடப்பாடி பேசினார். ஆனால் அதை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று விளக்கம் அளிக்கின்றனர்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications