யாரெல்லாம் நிதி கொடுக்குறாங்க? ட்ராக் பண்ணுங்க.. தமிழ்நாடு வெள்ள நிவாரணம்.. நோட்டமிடும் டெல்லி!
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்துவிட்டு டெல்லி திரும்பிய மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர் மோடியை சந்தித்து விரிவான ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். இது குறித்து டெல்லியிலிருந்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதாவது, ராஜ்நாத் சிங் கொடுத்த அறிக்கையில் பாதிப்புகளின் விபரங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இதைத்தாண்டி, பிரதமரிடம் சில விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜ்நாத் சிங். அதாவது, ஜீரணிக்கமுடியாத பாதிப்புகளில் சென்னை இருக்கிறது.

மத்திய அரசின் நிதி உதவி அவசியம்: இப்போதைக்கு மத்திய அரசின் நிதி உதவி அவசியம். தமிழக அரசு அதிகாரிகளிடம் விவாதித்த வகையில், நிதி நெருக்கடி கடுமையாக இருக்கிறது. நிவாரண நிதி உதவி செய்வதுடன், தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து கொடுத்து உதவ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழக அரசு இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
அதனால், மத்திய அரசுதான் விரைந்து நிதி உதவியை செய்ய வேண்டும். வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட எவ்வளவு சீக்கிரம் மத்திய குழுவினரை சென்னைக்கு அனுப்ப முடியுமோ அதனை சீக்கிரம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் ராஜ்நாத் சிங்'' என்கிற தகவல்கள் டெல்லியிலிருந்து கிடைத்துள்ளன.
கோரிக்கை என்ன?: இதற்கிடையே, தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நிதி உதவியளிக்க வேண்டும் என்று சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த கோரிக்கையின் அடிப்படையில், யாரெல்லாம் நிதி உதவி செய்கிறார்கள் ? எவ்வளவு நிதி சேர்கிறது ? என்பதை கவனித்து வருகிறதாம் மத்திய அரசு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். மழை வெள்ளம் குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மத்திய அரசிடம் மாநில அரசின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஸ்டாலின் விவரித்ததை கேட்டுக்கொண்டார் ராஜ்நாத் சிங். மத்திய அரசு நிதி உதவி அளிப்பது குறித்து ராஜ்நாத் சிங் உறுதி தந்தார்.
இந்த தகவல்கள் எல்லாம் வெளிப்படையானது. அதனை ராஜ்நாத் சிங்கே தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தாண்டி சில விசயங்கள் இந்த சந்திப்பில் நடந்திருக்கிறது. மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்த ஆலோசனை முடிந்ததும், நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருக்கிறது.
வெள்ள பாதிப்பு: அதனால், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு கோரிக்கை வைக்கும் முழுத் தொகையையும் ரிலீஸ் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு, நிலைமை எனக்கு புரிகிறது. மத்திய குழுவினரை அனுப்பி வைக்கிறோம். அவர்களின் பரிந்துரைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக மக்களை கைவிட மாட்டோம் என்று சொல்லியுள்ள ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமரிடம் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம் ; பேசுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார். இதன் அர்த்தம், நிதி உதவி மட்டுமல்ல ; அரசியல் ரீதியாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற தொணி அதில் இருந்தது என்கிறர்கள் விபரமறிந்த கோட்டை அதிகாரிகள் தரப்பினர்.
மத்திய அரசு நிதி: இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications