சாக்சி கிட்ட பாஸ்வேர்ட் கேளுடா! தோனி எடுத்த முடிவு? சிஎஸ்கே ரசிகர்களை உலுக்கிய அந்த மீம்! நடக்குமா?
சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து நெட்டிசன்கள் பலரும் இப்போதே மீம்ஸ் போட தொடங்கி உள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.

நேற்று நடக்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை. தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் பெய்த மழை காரணமாக நேற்று மேட்ச் நடக்கவில்லை. இந்த நிலையில் இன்று மேட்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி இறுதிப்போட்டி: சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
முக்கியமாக நேற்று ஆட்டத்தை காண அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். மழை பெய்தும் கூட போட்டி தொடங்காதா.. தோனியை பார்க்க மாட்டோமோ என்று ஆவலுடன் பலரும் அவரை பார்க்க காத்து இருந்தனர்.
நேற்று மழையால் ஆட்டம் இன்று மாற்றப்பட்ட போதும் கூட சென்னையில் இருந்து குஜராத் சென்றவர்கள் அங்கே ரயில்வே நிலையத்திலேயே தூங்கி இன்று நடக்கும் போட்டியை காணும் அளவிற்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சீசனில் தோனியால் எல்லா மைதானங்களும் மஞ்சளாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அவரை வெற்றியோடு அனுப்ப வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தோனி இன்று ஓய்வை அறிவிக்க போகிறார் என்று கூறி பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதிலும் சாக்சிகிட்ட என் டிவிட்டர் பாஸ்வேர்ட் கேளுடா.. அதுல வீடியோ போட்டு ரிட்டையர் ஆகணும் என்று கூறும் மீம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. கடந்த முறை இதேபோல்தான் டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதேபோல் இந்த முறையும் அவர் செய்ய போகிறாரோ என்ற அச்சம் ரசிகர்கள் இடையே உள்ளது.

சிஎஸ்கே ரசிகர்கள் பலரின் நெஞ்சை இந்த ஒற்றை மீம் உலுக்கி உள்ளது. அதேபோல் நேற்று பெய்த மழையை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நேற்று தொடக்கத்தில் மாலை ஒரு மணி நேரத்திற்கு பின் மழை பெய்யாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 மணி வரை தொடர்ந்து பெய்தது. அதன்பின் மழை விட்டாலும் சிறிது நிமிடத்தில் மீண்டும் சாரல் மழை பெய்தது.

11 மணி வரை பொறுத்து பார்த்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மோசமானது. அதன்படி நேரம் செல்ல செல்ல ஓவர்கள் குறைக்கப்பட்டன. கடைசியில் மழை விடாத நிலையில் நேற்று ஆட்டம் இன்றைக்கு மாற்றப்பட்டது. இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications