"அவரை" சசிகலா சந்தித்தாராமே.. ஒரே சஸ்பென்ஸா இருக்கே.. இது எப்போ? விரைவில் நெருங்குகிறது கிளைமாக்ஸ்
எடப்பாடி பழனிசாமியை திவாகரன் சந்திக்க போகிறாராம்
சென்னை: சசிகலாவுக்கு நாலாபக்கமும் நெருக்கடி கூடி வரும் நிலையில், ஒரே ஒரு மகிழ்ச்சியும் தெம்பூட்டும் சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளதாம்.. அதை பற்றிதான் அரசியல் வட்டாரமே கிசுகிசுத்து வருகிறது.
ஜெயலலிதா எங்கு சென்றாலும் கூடவே சசிகலா செல்வது வழக்கம்.. இவர்கள் 2 பேருக்கும் உற்ற துணையாகவே கூடவே செல்பவர்தான் திவாகரன்..!
பாதுகாவலன் என்ற கட்டத்தையும் தாண்டி, அரசியல் ரீதியாகவும் செயல்பட ஆரம்பித்தவர்.. ஜெ.மறைந்தபிறகு தினகரன் சொந்தமாக கட்சி ஆரம்பித்தார்..

திவாகரன்
ஆனால், இது திவாகரனுக்கு பிடிக்கவில்லை.. அண்ணனும், தம்பியும் சண்டை போட்டுக் கொண்டனர்.. பிறகு, திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியை தனியாக தொடங்கினார்... இதை கேள்விப்பட்டு ஜெயிலில் இருந்த சசிகலா கொந்தளித்தார்.. திவாகரன் எனது சகோதரனே இல்லை என்றுகூட சொன்னார். இந்த கோபம் பல நாட்கள் தொடர்ந்தது.

சுந்தரக்கோட்டை
தினகரனும் சேரவில்லை சசிகலாவும் இணையவில்லை.. அந்த சமயத்தில்தான், திவாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.. இவரது வீடு திருவாரூர் சுந்தரகோட்டையில் உள்ளது.. சிகிச்சையில் இருந்தபோதுதான், அவரை சசிகலா சென்று சந்தித்ததாக செய்திகள் கசிந்தன.. ஆனால், உறுதியாக தெரியவில்லை..
சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி சென்னைக்கு வந்ததிலிருந்து அவரை சந்திக்கவில்லை திவாகர்... நடராஜனின் நினைவுநாளில் தஞ்சைக்கு சசிகலா சென்றபோதும் பரஸ்பரம் சந்திக்க இருவருமே விரும்பவும் இல்லை.. அதற்காக முயற்சிக்கவும் இல்லை.

அதிசயம்
இந்த நிலையில்தான், அப்படி ஒரு அதிசயம் நடந்துள்ளது. "நீறுபூத்த நெருப்பாக இப்படியே மனவருத்தங்கள் இருப்பது சரி இல்லை. தினகரனும் ஒரு பக்கம் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறார், நாமும் பாரா முகமாக இருக்கிறோம். இதனால்தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் எல்லாம் அக்காவை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டேங்கிறார்கள். முதலில் நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் அவர்களுக்கு பயம் வரும்" என்று திவாகரன் குடும்பத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
இதனையடுத்தே கடந்த வாரம் சசிகலாவை சந்தித்து மனம் விட்டு பேசிவிட்டு சென்றிருக்கிறார் திவாகரன்... இதற்கு பிறகு, அதிமுகவுக்குள் சசிகலாவை சேர்க்க அதிக எதிர்ப்பு காட்டி வரும் எடப்பாடி பழனிசாமியை மிக விரிவாகவும் சந்தித்து விவாதிக்க திட்டமிட்டிருக்கிறாராம் திவாகரன்... அதுமட்டுமல்ல, சிறையில் சசிகலா இருந்த போது எடப்பாடிக்கும் திவாகரனுக்கும் நல்ல நட்பு தொடர்ந்தது...

திவாகரன் - எடப்பாடி பழனிசாமி
தினகரன் மீதிருந்த கோபம் எதுவும் திவாகரன் மீது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் யாருக்கும் இருந்ததில்லை... அந்த வகையில், அந்தகாலம் முதல் இப்போதுவரை அதிமுகவுடன் நல்ல தொடர்பை வைத்து வருகிறார் திவாகரன்.. கடந்த ஒரு வருடமாக அமைதியாக இருந்த திவாகரன், சசியை அதிமுகவுக்குள் கொண்டுவரும் முயற்சியை தற்போது தொடங்கிவிட்டார் என்கிறார்கள் சசிகலா குடும்ப வட்டாரங்கள்.. அப்ப விரைவில் கிளைமாக்ஸ் நெருங்கிவிடும் என்று தெரிகிறது..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications