சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதென்ன லிஸ்ட்லேயே இல்லையே.. அன்னைக்கே ஸ்டாலின் சொன்னாரே.. பலே பிளானை போடும் திமுக.. என்னன்னு பாருங்க

பட்ஜெட் தினத்தன்று ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவிக்க திமுக திட்டமிட்டு வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: நாடே பரபரப்புடன் பட்ஜெட் தாக்கலை எதிர்நோக்கியிருக்கும் சூழலில், திமுக மிக முக்கியமான பிளான் ஒன்றை போட்டு வருகிறதாம்...!

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே, மத்தியில் பாஜகவுடன் கொள்கை ரீதியாக முரண்பட்டு நிற்கிறது.. அதேசமயம், நிர்வாக ரீதியாக இணக்கமான போக்கையும் கையாண்டு வருகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் - ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் விலகுவது எப்போது ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் - ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் விலகுவது எப்போது

இதற்கு காரணம், எவ்வளவுதான் கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாலும், மாநில நலன் என்று வருகிறபோது மத்திய அரசை பகைத்து கொள்ள எந்த மாநிலமும் தயாராக இருப்பதில்லை..

 நிலுவைத் தொகை

நிலுவைத் தொகை

நம் தமிழகத்தை பொறுத்தவரை நிறைய பிரச்சனைகள் உள்ளன.. நமக்கு வர வேண்டிய நிலுவை தொகை, ஜிஎஸ்டி பணம் உள்ளிட்டவை அப்படியே வராமல் நிற்கிறது.. இவைகளுக்கு ஒரு முடிவு எடுப்பதற்காகவும், சுமூக தீர்வுக்காகவும் நாம் டெல்லியை தான் எதிர்நோக்கி இருக்க வேண்டி உள்ளது.. குறிப்பாக, நீட் தேர்வு தலையாய பிரச்சனையாக உள்ளது.. இதை ரத்து செய்வதில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் உறுதியாக நிற்கிறது...

அமித்ஷா

அமித்ஷா

இதுதொடர்பான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை... எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்த திமுக எம்பி டிஆர் பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் முயற்சித்தனர்.. ஆனால் அமித்ஷா தமிழக எம்பிக்களை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் தராமலேயே திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்பட்டது.. இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது..

 நீட் மசோதா

நீட் மசோதா

இதனால் முதல்வர் தரப்பு கடுமையான அதிருப்திக்கும் ஆளானது.. நீட் மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழக ஆளுநர் தான் காரணம், அவர் தான் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஆளுநர் அதனை குழிதோண்டி புதைத்து விட்டார், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று டிஆர் பாலு வலுவலகேவ தன்னுடைய கண்டனத்தையும் அப்போது பதிவு செய்திருந்தார்...

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

எனினும், டிஆர்.பாலு ஆளுநரை மட்டும் எதிர்த்தாரே தவிர, அமித்ஷா குறித்து எதுவுமே பேசாதது முதல்வருக்கு ஏமாற்றம் தான் என்றும், டிஆர் பாலு மீது அப்போதே முதல்வர் வருத்தப்பட்டதாகவும் செய்திகளும் கசிந்தன.. அதனால்தான், தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடியதுமே முதல்வேலையாக, அதுவும் நேரடியாகவே முதல்வர் ஸ்டாலின், அமித்ஷாவிற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.. நீட் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தையும் முதல்வர் கூட்டி விவாதித்தார்.. எனினும், இதுவரை நீட் குறித்த சாதகமான பதில் எதுவும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை..

பட்ஜெட்

பட்ஜெட்

இப்படிப்பட்ட சூழலில்தான், மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது.. இதற்காக, 31-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் துவங்க போகிறது.. இந்த கூட்டத்தில் ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் உள்ளே, தங்களின் வாயில் கறுப்புத்துணிக் கட்டி கண்டனம் தெரிவிக்க திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது..

 ஜனாதிபதி

ஜனாதிபதி

நீட் கோரிக்கையை ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவரிடம் கொடுத்து விட்டு தமிழக எம்பிக்கள் திரும்பிவிட்டாலும், இதனை தமிழக எம்பிக்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.. மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது என்ன விதமான ஜனநாயகம்? என்று தமிழக எம்பிக்களிடம் இன்னமும் கோபம் இருக்கவே செய்கிறது.. இப்படிப்பட்ட நிலையில்தான், ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவிக்க தமிழக எம்பிக்கள் கறுப்புத் துணியை வாயில் கட்டிக்கொள்ள திட்டமிடுவதாக திமுக தரப்பில் எதிரொலிக்கிறது... இதற்கு பிறகாவது மத்திய அரசு செவிசாய்க்குமா? பார்ப்போம்..!

English summary
Is DMK going to condemn the President on Budget Day, say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X