திமுக கூட்டணியில் பாமக? துரைமுருகன் மாஸ்டர் பிளான் என்ன? பரபர பின்னணி
Recommended Video

சென்னை: திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பதற்கு அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் முயற்சி செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த, திமுக பொருளாளர் துரைமுருகன், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லை என்றும், கூட்டணி குறித்து இனிதான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக திருமாவளவன் அளித்த பேட்டியை தொடர்ந்து துரைமுருகன் இப்படி ஒரு பேட்டியளித்தார்.

திடீர் பரபரப்பு
திருமாவளவன் தன்னிச்சையாக தனது தொகுதி குறித்து கூறியதால், அதற்கு பதிலடியாக துரைமுருகன் இவ்வாறு கூறியதாக கருத்து இருந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று போனில் அனுமதி கேட்டுள்ளார் திருமாவளவன். முரசொலி அலுவலகத்திலிருந்து ஆ.ராசா உள்ளிட்டோருடன், அறிவாலயம் திரும்பிக்கொண்டிருந்த ஸ்டாலின், உடனே வாருங்களேன் என கூறியுள்ளார்.

ஸ்டாலின்-திருமா சந்திப்பு
இதையடுத்து ஸ்டாலின் அறிவாலயம் செல்லும் முன்பாகவே, திருமா அங்கு வந்து சேர்ந்துவிட்டாராம். பிறகு இரு தலைவர்களும், துரைமுருகன் பேட்டி பற்றி பேசியுள்ளனர். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி உறுதி செய்வோம் என்பதைத்தான் துரைமுருகன் கூறியுள்ளார். அதை தவறாக நினைக்க வேண்டாம் என ஸ்டாலின் கூறி அனுப்ப திருமாவளவன் முகத்தில் மலர்ச்சி.

ஆதங்கம்
அதேநேரம், இதுவரை கூட்டணி உறுதியாகவில்லையே என்ற வருத்தமும் விடுதலை சிறுத்தைகள் வட்டாரத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சாளர்கள் பலரும் இந்த ஆதங்கத்தை தெரிவிக்கிறார்கள். இதன் பின்னணி என்ன என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல்கள் சுவாரசியமானவை.

முடிவெடுக்கவில்லை
திமுகவின் மேற்கு மண்டலத்திலுள்ள நிர்வாகிகள் சிலர், விடுதலை சிறுத்தைகளை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், மேற்கு மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு வாக்குகள் குறைந்துவிடும் என்று கூறி வருகிறார்கள். எனவேதான், விடுதலை சிறுத்தைகள் விஷயத்தில், திமுக தலைமையால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லையாம்.

பாமகவுடன் கூட்டணி
இதனிடையே துரைமுருகனும்கூட, பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர முயலுவதாக ஒரு தகவல் கூறுகிறது. பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் ஒரே கூட்டணிக்குள் இருப்பது சாத்தியப்படாது என்பதால், விடுதலை சிறுத்தைகளை கழற்றிவிட துரைமுருகன் முயலுவதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா இந்த தகவலை மறுத்தார்.

திட்டவட்ட மறுப்பு
ஆ.ராசா கூறுகையில், திமுக ஜாதி மறுப்பு இயக்கம். துரைமுருகன் அதில் ஒரு சீனியர் தலைவர். அவர் பிறப்பால் வன்னியர் என்பதால், பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவர முயலுவதாக வெளியாகும் தகவல்கள், உண்மையிலேயே, துரைமுருகனை கொச்சைப்படுத்துவதை போன்றது. துரைமுருகன் கட்சியின் தலைமை, தொண்டர்கள் மனநிலையை அறிந்து பிரதிபலிப்பவர். தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புகளை கட்சிக்குள் கொண்டுவரமாட்டார். எனவேதான், கட்சிக்குள் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications