பொதுவெளியில் இதை எல்லாம் பேசுவீங்களா? காங்கிரஸ் மீது கடுப்பான திமுக.. குறுக்கே புகுந்த விஜய்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தவெகவை பற்றி பேசுவது, விஜயை பாராட்டி பேசுவது ஆளும் திமுக தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளதாம். கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸ் தலைவர்கள் இந்த செயலில் ஈடுபடுவது திமுக தரப்பை அப்செட் ஆக்கி உள்ளதாம்.
திமுக தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர் ஹபீசுல்லா காங்கிரசை விமர்சனம் செய்து வெளியிட்டுள்ள போஸ்டில், ஏற்கெனவே சொன்னதுதான் கூட்டணி என்பது Mutual respect மற்றும் Mutual benefit சம்பந்தப்பட்டது. கூட்டணி அமைக்கும் போது எல்லாக் கட்சிகளுக்கும் பலன் இருக்கும் இழப்பும் இருக்கும். கூட்டணியில் இருப்பதால் கட்சிகளுக்கு ஏற்படும் இழப்பை பேச வேண்டிய இடம் அந்தந்தக் கட்சிகளின் தலைமைகளுடன்தான். அதை பொதுவெளியில் பேசுவது party discipline க்கு எதிரானது.

காங்கிரஸ் மீது கோபத்தில் திமுக
எங்களுக்கும் கூட்டணி பற்றி ஆயிரம் கருத்துகள் உண்டு. கட்சியின் நலனுக்கு, நாட்டின் நலனுக்கு எது தேவையோ அந்த முடிவை கட்சித் தலைமை எடுக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளும் கட்டுப்பாடு உண்டு. கட்சித் தலைமைக்கு கட்டுப்பட மறுப்பவர்கள், களத்திற்கே வராமல் சீட்டு வாங்கி தோற்பவர்கள்தான் Party discipline இல்லாமல் Alliance disciplineஐக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி தர்மம், ஒழுக்கம் எல்லாம் தெரியுமென்பதால் இந்த அளவில் இதை முடித்துக் கொள்கிறேன், என்று காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் கோபம்
ஏற்கனவே காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளை வகுப்பதில் பிரவீன் சக்கரவர்த்தி முக்கியப் பங்காற்றினார். முக்கியமாக தற்போது ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல்களை திரட்டியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
குறிப்பாக, தரவு மற்றும் அரசியல் பகுப்பாய்வு தொடர்பான விஷயங்களில் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகராக அவர் கருதப்பட்டார். எனினும், கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அவரது செயல்பாடுகள் கட்சிக்குள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.
விஜய் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இவர் மீது காங்கிரஸ் ஆக்சன் எடுக்கவில்லை. காங்கிரசின் இந்த செயல் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளதாம். குறைந்தபட்சம் அவருக்கு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம்.
ஸ்டாலினை கோபப்படுத்த 70 சீட்டுகள்
ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார் . இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஏற்கனவே ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம்.
கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். இம்முறை சுமார் 70 தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்; முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. கிரிஷ் சோடங்கர் இதை நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கேட்டதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கிரிஷ் சோடங்கர் ஸ்டாலின்
தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது. வலுவான காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் மக்களை ஈர்ப்பதோடு, சமச்சீரான ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இது, வெறும் துணைப் பங்காளியாக இல்லாமல், முக்கிய சக்தி என்ற காங்கிரஸின் இலக்கை உணர்த்துகிறது. தவெக ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக கிரிஷ் சோடங்கர் இப்படி கேட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் இதை விரும்பவில்லை, அவர் கோபப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் கோபம்
காங்கிரஸின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தாலும், எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்த பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் இவை நடக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி உறுதியாக இருப்பதாக இரு கட்சிகளும் பொதுவெளியில் தெரிவித்தாலும், அதிக இடங்கள், அதிகாரப் பங்கீடு கோரிக்கைகள் பேச்சுவார்த்தைகள் சவாலாக அமையலாம். இதனால் வரும் வாரங்களில் தீவிரமான பேரம்பேசல்கள் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications