திமுகவை தாய்க்கழகம்னு சொல்லி! தாய்மையை கொச்சைப்படுத்திவிட்டீர்கள் ஓபிஎஸ்! கொந்தளித்த தமிழிசை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மோசமாக நடத்திய திமுகவை தாய்க் கழகம் என்பதா என ஓபிஎஸ்ஸுக்கு முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ... எப்பொழுது... ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும்.. தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்....

மரியாதைக்குரிய ஜெயலலிதா தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ, எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்கள் அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக் கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது.
ஓபிஎஸ்ஸின் திமுகவின் சேர்க்கை திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்... இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், அய்யப்பன் எம்எல்ஏ உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.
இந்த இணைப்புக்கு பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தாய்க் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை இணைத்துக் கொண்டுள்ள திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்கு எனது முதல் நன்றியும் வணக்கத்தையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு அரசியல் பண்பாடோடு முதல்வர் ஸ்டாலின், கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாகவே உணர்ந்து திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்.
அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப்போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி, எந்தக் காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகவிற்கு உருவாக்கியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால், அதிமுக தொண்டர்கள், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு ஸ்டாலினை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications