2011ல் வடிவேலு.. 2026ல் சீமான்! விஜய்க்கு விஜயகாந்த் நிலையா? எல்லாம் திமுக வேலை? வெகுண்டெழுந்த தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து விமர்சித்தார். இந்த நிலையில் 2011 தேர்தலில் வடிவேலுவை விஜயகாந்தை விமர்சிக்க பயன்படுத்தியது போல, 2026 தேர்தலில் விஜயை விமர்சிக்க சீமானை திமுக பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஸ்டாலின் சீமான் சந்திப்பையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுகளும் சூடு பிடித்துள்ளன. திமுக கூட்டணி கிட்டத்தட்ட அதே நிலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை கூட்டணியில் சேர்த்து இருக்கிறார்.

மேலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வரவும் பேச்சு வார்த்தை நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக தமிழக வெற்றி கழகம் கூட்டணி கூட அமையலாம் எனவும், அதில் சீமான் இணையலாம் என பல யூகங்கள் பரவி வருகிறது.

Is DMK Using Seeman to Target Vijay

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனித்து தான் போட்டி என அறிவித்திருக்கிறார் சீமான். அதே நேரத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தமிழக வெற்றி கழகம் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறது. ஒருவேளை துணை முதலமைச்சர் பதவி 50 சீட்டு கொடுத்தால் அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்லலாம் என கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக பேசத் தொடங்கி இருக்கிறார் சீமான்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் கொள்கை கொண்ட இளைஞர்களுக்கும் ரசிகர்களை கொண்ட கட்சிக்கும் தான் இனி போட்டி என விஜய் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தை தான் அரசியல் எதிரியாக கருதுவதாக சீமான் பேசியிருந்தார். இது ஒரு புறம் இருக்க காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய சீமான் நேற்று வந்தவர்களுக்கெல்லாம் ஒய் பிரிவு பாதுகாப்பு என விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியதை விமர்சித்து பேசினார்.

இந்த நிலையில் சீமானின் அறிவிப்பு திமுகவின் 'பி' டீம் போல இருப்பதாக விமர்சிக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். அதாவது 2011 தேர்தலில் விஜயகாந்த்தை வீழ்த்த வேண்டும் என நினைத்த திமுக திரைத்துறையில் இருந்து வடிவேலுவை பயன்படுத்தியது. தொடர்ந்து பிரச்சாரங்களில் விஜயகாந்த் குறித்து பல்வேறு அவதூறான கருத்துக்களை பேசி வந்தார் வடிவேலு.

இந்த நிலையில் 2011 தேர்தலை போல 2026 தேர்தலில் விஜயை விமர்சித்துப் பேச சீமானை திமுக களம் இறக்கி இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஸ்டாலின் சீமான் சந்திப்பையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆளும் கட்சியை விட்டுவிட்டு முதன்முதலாக தேர்தலை சந்திக்கும் கட்சியை ஏன் சீமான் விமர்சிக்க வேண்டும் எனவும், கடந்த காலங்களை தம்பி தம்பி என விஜய்யை குறிப்பிட்டு பேசிய சீமான், தற்போது அவரை விமர்சிக்க காரணம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர்.

மேலும் சீமான் விஜய் குறித்து பேசிய பழைய காணொளிகளையும் தற்போது பேசிய காணொளிகளையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் தமிழக கட்சி கழகத்தினர் இடையே சமூக வலைதள மோதல் வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+