மீண்டும் மீண்டுமா? இந்தியா - பாக் போரை நிறுத்தினேன் என டிரம்ப் தம்பட்டம் அடிக்க! இப்படியொரு காரணமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் தலையீட்டால்தான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு பேசி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார்.

donald trump pakistan Jammu Kashmir

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் வீண் பேச்சு

முன்னதாக டிரம்ப் இதே விவகாரம் தொடர்பாக பேசுகையில், இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.

சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள், என்று கூறி இருந்தார்.

என்ன காரணம்?

மீண்டும் மீண்டும் டிரம்ப் இப்படி தம்பட்டம் அடிக்க முக்கிய காரணம் உள்ளது. டிரம்ப் தனது கடந்த ஆட்சியிலேயே அமைதிக்கான நோபல் பரிசு வாங்க முயற்சி செய்தார். தாலிபான்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தை, வடகொரியா அதிபரை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை என்று டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு வாங்க முயன்றார். நடக்கவில்லை.

இந்த முறை ஆட்சியில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த ஒப்பந்தம் செய்தார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றை அமெரிக்கா அளித்துள்ளது. நேட்டோ படையில் இணையும் திட்டத்தை, கனவை உக்ரைன் மறந்துவிடலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். அதோடு உக்ரைனுக்கு கொடுத்த பல கோடி நிதிகளை திருப்பி கொடுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த செலவிற்கு ஈடுகட்டும் விதமாக உக்ரைனுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம். அதன்படி உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து, உற்பத்தியில் இருந்து வரும் வருவாயில் முதல் பங்கு அமெரிக்காவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனிடம் தெரிவித்து உள்ளதாம். இதன் மூலம் ரஷ்யாவை முழுமையாக சமாதானம் செய்து.. அந்த போரை முடிவிற்கு கொண்டு வரும் நிலைக்கு சென்றுவிட்டார்.

இப்போது இந்தியா - பாகிஸ்தான் போர்

ரஷ்யா - உக்ரைன் போர் போலவே இப்போது இந்தியா பாகிஸ்தான் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை எல்லாம் தான்தான் செய்தேன் என்று டிரம்ப் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் மூலம் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு எப்படியும் கிடைக்கும் என்ற நப்பாசையில் அவர் பேசுகிறாரே என்று தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+