எங்கே போனீங்க? மிஸ் பண்ணிட்டீங்க.. சென்னை வெள்ளம்.. அதிமுக டாப் தலைகளை விட்டு விளாசிய எடப்பாடி?
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் பெரிதாக பணிகளை செய்யாத அதிமுகவின் டாப் லீடர்கள் மீது எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம்.
சென்னையில் பெய்த கனமழை, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர்.. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் உட்பட, மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அம்மாவின் அரசில் முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்: அதிகாரிகள் இல்லை: சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் IAS அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக (Nodal Officers) நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்படும் IAS அதிகாரிகள் அந்த மண்டலத்தில் உள்ள வார்டுகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வருவாய், மாநகராட்சி, காவல்துறை, பெருநகர குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, மக்கள் நல்வாழ்வுத் துறை, மின்சார வாரியம் போன்ற தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, மழைக் காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்தத் திட்டமிடுவார்கள்.
என்ன சொன்னார்? இப்பணிகள் எல்லாம் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும். மேலும், கால்வாய்களில் தேங்கியுள்ள மண் (சில்ட்) பருவ மழைக்கு முன்னதாகவே அப்புறப்படுத்தப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் புயல் பற்றிய தகவலை வழங்கியவுடன், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிவாரண மையங்கள், உணவு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், படகுகள் தயார் நிலையில் இருப்பதோடு, மீட்புப் பணிகளில் ஈடுபட மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதனால், மீட்பு பணிகள் எங்கள் ஆட்சியில் சுணக்கமின்றி நடைபெற்றது.
சொதப்பி விட்டார்கள்: மேலும் எங்கள் அரசு, மக்களுக்கு 5 நாட்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், போதுமான அளவு குடிநீர் மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை நிரப்பிக்கொள்வது போன்றவற்றையும் மற்றும் முக்கிய ஆவணங்கள், மாணவர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் போன்றவற்றை பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு செய்யும். ஆனால், இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கையினையும் மக்களிடம் செய்யத் தவறிவிட்டது.
இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது, என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனங்களை வைத்தார்:
பெரிதாக பணிகளை செய்யவில்லை: இந்த நிலையில்தான் சென்னையில் வெள்ளத்தில் பெரிதாக பணிகளை செய்யாத அதிமுகவின் டாப் லீடர்கள் மீது எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் வெள்ளத்திலும் மக்களை சந்திப்பது.. செய்தியாளர்களிடம் பேசுவது என்று களத்தில் இருந்தார்..
ஆனால் மற்ற மாஜிக்கள் யாரும் களத்திற்கே வரவில்லை. கவுன்சிலர் யாரும் கூட களத்திற்கு வரவில்லை. எடப்பாடி சென்னையில் இருக்கும் போது அவருடன் சேர்ந்து பணிகளை செய்தது.. சென்னையில் அவர் இருக்கும் போது முகாம்களை நடத்தியது தவிர நிர்வாகிகள் பணிகள் எதையும் செய்யவில்லை.
முக்கியமாக ஈரோட்டில் விழா ஒன்றிற்கு எடப்பாடி பழனிசாமி சென்ற போது.. இங்கே நிர்வாகிகள் வேலை எதையும் செய்யாமல் ஓபி அடித்துள்ளனர். திமுக மீது பெரிதாக விமர்சனம் இல்லாத நிலையில் இந்த புயல் வெள்ளத்தை பயன்படுத்தி அதிமுக பெரிதாக ஸ்கோர் செய்து இருக்கலாம். ஆனால் இதை சென்னை நிர்வாகிகள் பலர் மிஸ் செய்துவிட்டனர். இதை சுட்டிக்காட்டித்தான் அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications