வெள்ளை வேட்டியில் கருப்பு ஆடு! ஓபிஎஸ் கேம்பில் ஆள் போட்ட எடப்பாடி.. எல்லாம் சதி! வாட்ச் செய்த திமுக
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு மூவையும் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக கண்காணித்து வருகிறாராம்.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் ஜெகஜோதியாக நடந்து கொண்டு இருக்கின்றன. ஓஎம்ஆர், ஈசிஆரில் பொதுவாக சங்கர் படங்களுக்கு போடப்படும் பெரிய செட் போலவே.. தற்போது வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கும் செட் போடும் பணிகள் நடந்து வருகின்றன.
அதிமுக பொதுக்குழுவை இதுவரை இல்லாத பிரம்மாண்டத்தோடு நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று வருகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அதில் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி, பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம் என்கிறார்கள்.

எடப்பாடி கண்காணிப்பு
அதிமுகவில் பெரிய களேபரங்கள் நடந்து வரும் நிலையில்.. ஓ பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு மூவையும் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக கண்காணித்து வருகிறாராம். ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக என்ன செய்வார். யாரை சந்திப்பார். யாரிடம் பேசுகிறார் என்று ஒவ்வொரு விஷயங்களையும் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக கணித்து வருகிறாராம். தன்னுடைய கேம்பில் யாரிடம் பேசி வருகிறார், யாருடன் எல்லாம் நெருக்கமாக இருக்கிறார் என்பதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக கண்காணித்து வருகிறாராம்.

ஓ பன்னீர்செல்வம்
இது தொடர்பாக எடப்பாடி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில்.. ஓ பன்னீர்செல்வமின் ஒவ்வொரு மூவும் அண்ணன் எடப்பாடியாருக்கு தெரியும். அவர் எங்கே செல்கிறார். என்ன செய்வார் என்று தெரியும். அதை வைத்துதான் ஓ பன்னீர்செல்வமின் தென்னக பயணத்தை எடப்பாடி தடுத்து நிறுத்தினார். உள்ளே வெள்ளை வேஷ்டியில் ஒரு கருப்பு ஆடு இருக்கிறது. அவரின் அடுத்த மூவ் என்ன என்பது எங்களுக்கு முன்பே தெரியும், என்கிறார்கள் எடப்பாடி ஆதரவு ரரக்கள்.

புலம்பல்
அதிமுகவில் தனக்கு எதிராக இப்படி பலரும் திரும்புவார்கள் என்பதை ஓ பன்னீர்செல்வம் எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதிலும் தென் மாவட்டங்களிலும், தேனி மாவட்டத்திலும் கூட தனக்கான ஆதரவு சரிந்து போனதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே ஓ பன்னீர்செல்வம் போன் செய்யும் போது.. அதை கூட எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கட்சி விதி
ஓ பன்னீர்செல்வம் இதனால் தனக்கு நெருக்கமான சிலரிடம் புலம்பி இருக்கிறாராம். கட்சி விதி மட்டும்தான் எனக்கு ஆதரவாக உள்ளது. தொண்டர்கள் சப்போர்ட் இருக்கிறது. ஆனால் பொதுக்குழு நிர்வாகிகள் ஆதரவு இல்லை. அதுதான் எனக்கு முக்கியம். நெருக்கமாக இருந்தவர்களே சதி செய்துவிட்டார்கள். எங்கே போவது என்று தெரியவில்லை. வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று ஓ பன்னீர்செல்வம் புலம்பி இருக்கிறாராம்.

எடப்பாடிக்கு தெரியும்
சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆளும் திமுக தரப்பிடம் உதவி கேட்டதாக கூறப்பட்டது. அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி தடை போட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. அந்த விஷயமும் எடப்பாடி தரப்பிற்கு முன்பே தெரியும்.. திமுகவுடன் ஓபிஎஸ் நெருக்கமாக இருப்பதும் எடப்பாடி தரப்பிற்கு முன்பே தெரியும்.. அதனால்தான் திமுக - ஓபிஎஸ் கூட்டு என்று மாஜி அமைச்சர்களை வைத்து பேச வைத்தார் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

திமுக வாட்ச் மோட்
ஆனால் இதுவரை அதிமுக விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுக தலையிடவில்லை. அதாவது பொதுக்குழுவிற்கு ஆதரவு தரவோ, பொதுக்குழுவை தடுத்து நிறுத்தவோ திமுக ஆளும் கட்சியாக முயலவில்லை. நடப்பது நடக்கட்டும்.. நாம் இதில் தலையிட வேண்டாம் என்று வாட்சிங் மோடில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ஆளும் தரப்பில் இருந்தும்.. அதிமுக நிர்வாகிகள் தரப்பில் இருந்தும் தனக்கு ஆதரவு கிடைக்காத நிலையில்.. முழுக்க முழுக்க கோர்ட் உத்தரவை மட்டுமே நம்பி இருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம்!
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications