திருப்பம் தந்த திருப்பதி.. அதிமுகவை தேடி வரும் அந்த 2 கட்சி! மீண்டும் "பழைய" கூட்டணி.. அடடா ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக மீண்டும் மெகா கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2019ல் அதிமுக உருவாக்கிய அதே கூட்டணி சிறிய மாற்றத்தோடு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.

Is Edappadi Palanisamy planning to make a big AIADMK alliance with some new parties?

இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.

புதிய கூட்டணி: அதேபோல் 2024 லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ரகசியமாக போன் செய்து பேசி வருகிறாராம். முக்கியமாக லோக்சபா தேர்தலுக்கு முன் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறாராம்.

உருவாகும் வாய்ப்பு: இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடையில்தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி திருப்பதிக்கு கூட சென்றுவிட்டு வந்தார். எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவர் திருப்பதிக்கு சென்றுவிட்டு வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலில் அதிமுக மீண்டும் மெகா கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2019ல் அதிமுக உருவாக்கிய அதே கூட்டணி சிறிய மாற்றத்தோடு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுகவை சேர்ந்து விஐபி ஒருவர் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை செய்து வருகிறாராம்.

ஏற்கனவே அவர் செய்த பேச்சுவார்த்தையில்.. லோக்சபா தேர்தலில் எப்படியும் இங்கே பாஜக வெல்லாது. நீங்கள் நின்று வென்றாலும் எம்பி பதவி பயன் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்காது. அப்படி இருக்க அதிமுக கூட்டணிக்கு வாருங்கள்.

2024 லோக்சபா தேர்தலில் இருந்தே நாம் ஒன்றாக இருப்போம். 2026 சட்டசபை தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம். அப்போது அமைச்சர் பதவியும் தருகிறோம். கூட்டணி ஆட்சி அமைப்போம். 2026ல் நாம் ஒன்று சேர்வதற்கு பதில் இப்போதில் இருந்தே தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வோம்.

திமுகவிற்கு எதிராக அவர்களை போலவே வலுவான அணி அமைப்போம் என்று அந்த விஐபி எடப்பாடி பழனிசாமி சார்பாக சொல்லி இருக்கிறாராம்.

இறங்கி வருகிறது: இதை கேட்டு பாமக இறங்கி வர முடிவு செய்துள்ளதாம். அதிமுகவுடன் இன்று முதல் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தில் உள்ளதாம். இன்னொரு பக்கம்.. தேமுதிகவும் பாஜக பெரிய டீலிங் கொடுக்கவில்லை என்றால் அதிமுகவிடம் இறங்கி வரும் எண்ணத்தில்தான் இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+