வண்டியை விடுங்க! ஓபிஎஸ் அஸ்திவாரத்தையே அசைக்கும் பிளான்! எடப்பாடி போடும் ட்ரிப்! குலுங்கும் சவுத்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதிமுக பொதுக்குழு முடிந்ததில் இருந்தே கட்சிக்குள் தீவிரமான உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் ஒரு பக்கம் உயர் நீதிமன்ற வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வரும் வாரம் தொடங்க உள்ளது. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் முறையிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு அனுமதி இன்றி நடத்தப்பட்டு உள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் தவறானது என்று கூறி ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

தென் மண்டலம்
இது போக அதிமுகவில் தென் மண்டல நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. ஓபிஎஸ் இப்போது தேனியில் தங்கி இருப்பதும், சமீபத்தில் டிடிவி தினகரன் தேனிக்கு சென்றதும் இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. முக்கியமாக ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் ஆகிய மூவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இணைய வாய்ப்பு உள்ளதாகவும், முக்குலத்தோர் சொந்தங்களை இவர்கள் ஒன்று இணைக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

முக்குலத்தோர்
தென் மண்டலத்தில் உள்ள முக்குலத்தோர் பலர் ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி தினகரன் ஆகிய மூவரையும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்த சில தென்னக தலைவர்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு தென் தமிழ்நாட்டில் அதிமுக ஆதரவே இல்லை என்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தென் தமிழ்நாடு
அதிமுகவில் ஏற்கனவே ஆர்பி உதயகுமார் முக்குலத்தோரை கவரவும், தென் தமிழ்நாட்டில் எடப்பாடிக்கு ஆதரவை பெறவும் உழைத்து வருகிறார். இதற்காகவே அவருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோரை கவரும் வகையில் எடப்பாடி முக்கிய பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் இறுதியில் சிவகங்கையில் மருது பாண்டியர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

பயணம்
இந்த நினைவு தினத்திற்காக எடப்பாடி பழனிசாமி சிவகங்கை செல்ல இருக்கிறார். இதில் தென் மண்டல முக்குலத்தோர் தலைவர்களை சந்திக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்த மாதம் தேவர் குரு பூஜை நடக்க உள்ளது. இந்த பூஜையில் அதிமுக தேவர் சமூக நிர்வாகிகளை சந்திக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video

போஸ்டர்
ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட தென் மண்டல நிர்வாகிகள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்போதே தென் மண்டலத்தில் எடப்பாடியை வரவேற்பதற்காக பாலங்களில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா சேர்ந்து முக்குலத்தோர் பிரிவை அவர்கள் பக்கம் இழுக்கும் முன், அவர்களிடம் பேசி சமாதானம் செய்ய எடப்பாடி இந்த பயணத்தை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தென் மண்டல அரசியல் வரும் நாட்களில் கவனம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications