அமித் ஷாவிடம் எடப்பாடி ஐக்கியம்? இரவோடு இரவாக ஸ்டாலினுக்கு போன தகவல்.. திமுக குஷி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி காட்சிகள் மாறும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முக்கியமாக இந்த வருடமே சில கட்சிகள் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன நெருக்கடி என்று முதலில் பார்க்கலாம்.

1. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.
2. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் சேர்க்கபட வேண்டும். தலைமை தொடர்பான முடிவுகளில் மாற்றங்களை செய்ய வேண்டும்.
3. அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்பது மட்டுமின்றி அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
4. அதிமுக பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும். இந்த கூட்டணிக்காக எடப்பாடி இறங்கி வர வேண்டும் என்றெல்லாம் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு உள்ளனவாம்.
5. அதாவது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைகளை மீண்டும் கட்சிக்கு உள்ளே கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றனவாம்.
அரசியல் மாற்றம்: இந்த நெருக்கடியின் விளைவாகவே அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம்.
2, அவர் விரைவில் அமித் ஷாவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையலாம்.
3. பாஜக - அதிமுக கூட்டணி வந்தால்.. சசிகலா,ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க வேண்டிய பிரஷர் இருக்காது .
4. இப்போது தனக்கு வரும் பிரஷருக்கு டெல்லிதான் காரணம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். அந்த பிரஷர் வராது என்பதால் எடப்பாடி அமித் ஷாவுடன் ஐக்கியம் ஆக முடிவு எடுத்துள்ளாராம் .
ஸ்டாலினுக்கு போன தகவல்: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் சில தகவல்கள் சென்றுள்ளதாம். அதன்படி, எடப்பாடி அமித் ஷா பேச்சு விரைவில் நடக்கும். கூட்டணி இறுதி செய்யபட வாய்ப்புகள் உள்ளன என்று தகவல் சென்றுள்ளதாம்.
திமுக முகாமிலிருந்து எடப்பாடி பக்கம் தாவ பேசி கொண்டிருந்தவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது. அவர்கள் அதிமுகவிடம் இணைய முடியாது. பாஜக கூட்டணி இருப்பதாக அதிமுக உடன் கூட்டணி வைக்க முடியாது. 2026ல் அதிமுக பாஜக மெகா கூட்டணி அமைக்க உள்ளது. பாஜக உள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த அதிமுக கூட்டணிக்கு செல்லாது என்று தகவல் சென்றுள்ளதாம்.
இதனால் திமுகவும் கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறதாம். அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுகவிற்கு அதிமுகவை காட்டி பிரஷர் கொடுக்க முடியாது என்பதால் திமுக தரப்பு உற்சாகத்தில் இறக்கிறதாம். இதனால் வரும் நாடகளில் தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி காட்சிகள் மாறும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முக்கியமாக இந்த வருடமே சில கட்சிகள் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
-
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications