Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமா கலைங்க! கிரீன்வேஸ் சாலையில் வாசிக்கப்பட்ட லிஸ்ட்! கடுகடுத்த ஓபிஎஸ்! லபக்கென பிடித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி இருக்கும் கிரீன்வேஸ் சாலை வீட்டில் கடந்த 24 மணி நேரமாக பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலோசனைகளுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கிறதாம்.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக செய்து வருகிறது.

வானகரத்தில் இருக்கும் ஸ்ரீ வாரு மண்டபத்திற்கு வெளியே திறந்தவெளி மண்டபத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எடப்பாடி

எடப்பாடி

இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இருக்கும் கிரீன்வேஸ் சாலை வீட்டில் கடந்த 24 மணி நேரமாக பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று பிற்பகல் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரின் ஆதரவாளர்கள் குவிந்து ஆலோசனை செய்தனர். 80 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது. இதில் அதிமுக அவமதிப்பு வழக்கை சந்திப்பது எப்படி. அதில் சட்ட ரீதியாக ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக என்ன மாதிரியான வாதங்களை வைப்பது போன்ற ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் நேற்று இரவும் இன்னொரு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், கேபி முனுசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் இன்று நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை நடக்கும் போதும் சிவி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தீவிர ஆலோசனைகளை செய்தனர். இதில் வழக்கு விசாரணை தாண்டி வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம்.

 வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை இல்லாமல்.. பொதுக்குழுவை எப்படி பாதுகாப்பாக நடத்துவது என்பது பற்றி இதில் ஆலோசனை செய்து இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி, பொதுக்குழுவில் புதிய பதவிகள் யாருக்கு எல்லாம் வழங்கப்படலாம் என்று ஆலோசனை செய்து இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் பதவி உள்ளதால் துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும். அதேபோல் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 எடப்பாடி பொதுச்செயலாளர்

எடப்பாடி பொதுச்செயலாளர்

இது போக எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனால்.. கட்சியில் தலைமை கழக செயலாளர் பதவியில் இருந்து அவர் விலகுவார். ஆகவே கட்சியில் பெரும்பாலான பொறுப்புகளில் மாற்றம் வரும். இதற்கான ஆலோசனை செய்யப்பட்டு லிஸ்ட் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது மொத்தமாக இப்போது உள்ள பதவிகளை கலைத்துவிட்டு புதிய பதவிகளை உருவாக்க போகிறார்கள். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இருக்கும் கிரீன்வேஸ் சாலை வீட்டில் கடந்த 24 மணி நேரமாக பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

லிஸ்ட்

லிஸ்ட்

இந்த ஆலோசனைகளின் முடிவில் புதிய பதவிகளுக்கான லிஸ்ட் வாசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர். கேபி முனுசாமி துணை பொதுச்செயலாளர். ஜெயக்குமார் பொருளாளர். விஜயபாஸ்கர் இன்னொரு துணை பொதுச்செயலாளர். சிவி சண்முகம் தலைமை கழக செயலாளர் ஆகிய பொறுப்புகளை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவில் இதை பற்றி விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!
    ஓபிஎஸ் கடுப்பு

    ஓபிஎஸ் கடுப்பு

    இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று உயர் நீதிமன்ற வழக்கு விசாரணை காரணமாக கடுப்பில் இருக்கிறதாம். அதன்படி, ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும்... அதன் பின் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல என்று இன்று நீதிபதிகள் கூறிய காரணத்தால், பொதுச்செயலாளர் தொடர்பான தனித்தீர்மானம் நிறைவேற்றுமோ என்ற கலக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடு கடுப்பில் இருக்கிறதாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+