Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தியை இழுக்க எடப்பாடி பிளான்.. குறுக்கே புகுந்த ஸ்டாலின்.. அதிமுக செய்த "தவறு".. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் செய்த தவறுகளால் ஸ்டாலினுக்கு சாதகமாக சூழல் மாறி உள்ளது. ஸ்டாலின் மீண்டும் வருவதற்கான சூழல் உள்ளது. ஒன் டூ ஒன் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே ஸ்டாலினை தோற்கடிக்க முடியும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. அந்த கட்சியில் லோக்சபா தேர்தல் முடிந்து என்ன நடக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Is Edappadi Palanisamy trying to impress Rahul Gandhi indirectly What is DMK counter planning

எடப்பாடி கூட்டணியில் செய்த தவறுகளால் ஸ்டாலினுக்கு சாதகமாக சூழல் மாறி உள்ளது. ஸ்டாலின் மீண்டும் வருவதற்கான சூழல் உள்ளது. ஒன் டூ ஒன் எதிர்ப்பு இருந்தால் மட்டுமே ஸ்டாலினை தோற்கடிக்க முடியும். ஆனால் எடப்பாடி தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கூட்டணியில் சொதப்பி விட்டார்.

அதிமுகவில் இரட்டையர்களாக எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருந்த போதே அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது ஓ பன்னீர்செல்வம் இல்லை. அண்ணாமலையும் இல்லை. அப்போதே 35 சதவிகிதம் மட்டுமே இவர்கள் வாக்குகள் பெற்றனர். ஆனால் இப்போது ஓ பன்னீர்செல்வமும் இல்லை. அப்படி இருக்க எடப்பாடி எப்படி வெல்ல முடியும்.

ஜெயலலிதா போன பின் சீமான் வாக்குகளை பிரித்துவிட்டார். இஸ்லாமியர்கள் வாக்குகள் போய்விட்டது. பல ஜாதி வாக்குகள் சீமானுக்கு செல்லும். இது போக முக்குலத்தோர் வாக்குகளை ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பிரிப்பர். அப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி எப்படி வெல்ல முடியும்? அவருக்கு வெற்றி சாத்தியம் உள்ளதா? எடப்பாடி எப்படி காங்கிரஸ் தங்கள் கூட்டணிக்கு வரும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது அதிமுக. சுனில் கனகூலு எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வரும் என்றெல்லாம் வரும் என்று சொன்னார்கள்.

அது எதுவுமே நடக்கவில்லை. இப்போது அதிமுக பரிதாபமாக போய்விட்டது. அதிமுகவின் பகல் கனவு எல்லாம் தோற்றுவிட்டது. கூட்டணியை ஸ்டாலின் திறம்பட கையாண்டு வருகிறார். அவர் கூட்டணியை உடைக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார். அது வெற்றி கூட்டணி. ஆர் கே நகரை தவிர வேறு எங்கும் தோல்வி அடையாத அணி.

. எடப்பாடி எவ்வளவு முயன்றும் கூட அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லையே. எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் இறங்கி வரவில்லையே. 2026ல் கூட்டணியை உறுதி செய்துதான் 2024ல் காங்கிரஸ் - திமுக கூட்டணியே மேற்கொள்ளப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார்.

கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அமைச்சர் ஆக வேண்டும். திமுக தனியாக ஆட்சி அமைக்க கூடாது. கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார். ஆனால் ஸ்டாலின் ராகுலிடம் பேசுகிறார். கூட்டணி டீலிங் அவர்களுடன் பேசுக்கொள்கிறார். இப்படி இருக்க ராகுலை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி நினைப்பதுதான் காமெடியே.. என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+