சம்பளத்தில் கைவைக்கும் வருமான வரி: ஒரு ரூபாய் கூட வீணாகாமல் தடுக்கும் 10 ரகசிய வழிகள்!
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதுமே மாதம் பிறந்தால் சம்பளம் வரும் என்ற மகிழ்ச்சியை விட, அதில் கணிசமான தொகை இந்திய வருமான வரித் துறை, வரியாக பிடிக்கப்படுகிறதே என்ற கவலைதான் பலருக்கும் மேலோங்கி நிற்கிறது.. அதிலும் பல நேரங்களில் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாம் அதிக வரியைச் செலுத்தி விடுகிறோம்.. ஒரு சம்பளதாரர் தனது நிதித் திட்டமிடலை நிதானமாகச் செய்தால், வரியைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்திற்கான ஒரு பெரும் நிதியையும் உருவாக்க முடியும்.. எப்படி தெரியுமா?
கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டிய பணத்தை முறைப்படி சேமிப்பதற்கும், அதே சமயம் சட்டத்திற்கு உட்பட்டு வரியைக் குறைப்பதற்கும் இந்திய வருமான வரிச் சட்டத்தில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன..

வருமான வரி
உண்மையில் பார்க்கும்போது, சட்டப்படி திட்டமிட்டு செயல்பட்டால் வரியை குறைப்பது மிகவும் சாத்தியமான விஷயம்.. இந்திய வருமான வரிச் சட்டத்தில் சம்பளதாரர்களுக்கு பல்வேறு வழிகள் வழங்கப்பட்டுள்ளன.. சரியான திட்டமிடல் இருந்தால், அதிக வரி செலுத்த வேண்டிய அவசியமே இருக்காது..
அதில் முக்கியமானது 80C பிரிவு.. இந்தப் பிரிவின் கீழ் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம்.. இதற்காக பல பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் உள்ளன..
பிபிஎஃப் திட்டம் சேமிப்பு
குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎஃப் திட்டம் நீண்டகால சேமிப்புக்கு மிகவும் பிரபலமான ஒன்று.. அரசு பாதுகாப்புடன் இருக்கும் இந்தத் திட்டம் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொகையை சேமிக்க உதவுகிறது.. அதேபோல் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக செலுத்தும் கட்டணத்தையும் 80C பிரிவின் கீழ் காட்டி வரியை குறைக்கலாம்..
பங்குச் சந்தை தொடர்பான சேமிப்பு திட்டமான இஎல்எஸ்எஸ் நிதியும் 80C பிரிவில் முக்கியமானது.. இதில் மூன்று ஆண்டுகள் மட்டுமே லாக்-இன் காலம் இருப்பதால், மற்ற முதலீடுகளை விட குறைந்த காலத்தில் பணத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.. நீண்டகாலத்தில் நல்ல லாபத்தையும் இந்தத் திட்டம் வழங்கும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்..
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்
இதற்கு பிறகு மருத்துவக் காப்பீடும் மிகவும் முக்கியமானது.. 80D பிரிவின் கீழ் நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்காக எடுத்துள்ள மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கு வரி விலக்கு கிடைக்கும்.. குறிப்பாக பெற்றோருக்காக எடுத்த காப்பீட்டின் மூலம் கூடுதல் சலுகையும் கிடைக்கும்.. இது வரியைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், திடீர் மருத்துவச் செலவுகளிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் அமைகிறது..
அதேபோல தேசிய ஓய்வூதியத் திட்டமான என்பிஎஸ்-ல் முதலீடு செய்தால் 80Cக்கு மேலாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு கிடைக்கும்.. இதனால் ஓய்வு காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது..
வீட்டுக்கடன் வரிச் சலுகைகள்
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் வரிச் சலுகைகள் இருக்கின்றன.. வீட்டுக் கடன் வட்டிக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.. அதேபோல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எச்ஆர்ஏ மூலம் வரியை குறைக்கலாம்.. நிறுவனத்தில் எச்ஆர்ஏ இல்லாவிட்டாலும் 80GG பிரிவின் கீழ் சலுகை பெறலாம்..
சம்பாதிப்பது மட்டும் முக்கியமல்ல.. அதை சரியாக திட்டமிடுவதும் முக்கியம்.. குட்டி விழிப்புணர்வு இருந்தாலே போதும் வரியும் குறையும்.. உங்கள் சேமிப்பும் பெருகும்.. !!!
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications