வீட்டை அடகு வைத்து நிலத்துக்கு பக்கத்து மனையை வாங்க நினைப்பது நல்ல முடிவா?
சென்னை: வீட்டை அடகு வைத்து நிலத்துக்கு பக்கத்து மனையை வாங்க நினைப்பது நல்ல முடிவா என்பதை பார்க்கலாம். பொதுவாக வீட்டை காட்டிலும் மண்ணின் மீதும் பொன்னின் மீதும் காசை போட்டால் என்றுமே சோரம் போகாது என்பது நிதர்சனம்.
இதனால்தான் பலர் ஏதாவது ஒரு வகையில் வீட்டையோ நகைகளையோ நிலத்தையோ வாங்கலாமா என பார்த்து வருகிறார்கள். இதற்காக ஒன்றை விற்று இன்னொன்றை வாங்கும் மனநிலை நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வீட்டை அடகு வைத்து நிலத்துக்கு பக்கத்து மனையை வாங்க நினைப்பது நல்ல முடிவா? நிச்சயமாக நல்ல முடிவு அல்ல.
அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
1. ஒருவேளை கடன் தவணை செலுத்தாமல் போனால், வீடு வங்கியால் எடுத்துக் கொள்ளப்பட்டால், வாழ்வதற்கு வீடு இருக்காது. பக்கத்து மனை மட்டுமே மிஞ்சும்.
நீங்கள் வீட்டை அடகு வைத்தால், மாதாமாதம் அதற்கு கடன் தவணை செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்த முடியாவிட்டால், வங்கி வீட்டை எடுத்துக் கொண்டு, பணத்தை பெற முயலும். அப்பொழுது உங்களுக்கு இருப்பதற்கு வீடு இல்லாமல் போய்விடலாம். பக்கத்து மனையில் வாழ இயலாது. ஏனென்றால் அது வெறும் நிலம் தான். அங்கு வீடு கிடையாது.
2. ஒருவேளை கடன் தவணை செலுத்த முடியாவிட்டால், பக்கத்து மனையை எளிதாக விற்று பணமாக மாற்ற முடியாது
ஒவ்வொரு முதலீட்டிற்கு மூன்று கூறுகள் உண்டு.
வளரும் விகிதம்
நீர்ப்புத் தன்மை
பணத்தை இழக்கும் அபாயம்
உங்களால் ஒருவேளை கடன் தவணையை செலுத்த முடியாவிட்டால், வீடு ஜப்தி செய்யும் நிலை ஏற்பட்டால், பக்கத்து மனையை விற்று அதன் மூலம் பணத்தைப் பெற்று வீட்டுக் கடனை அடைப்பது கடினம். ஏனென்றால் மனைக்கு நீர்ப்புத்தன்மை குறைவு.
3. அதிக கடன் சுமை
பக்கத்து மனை உங்களுக்கு பணத்தை ஈட்டி தராது. எனவே மாதாந்திரம் கடன் தவணைக்கு தற்போது உள்ள சம்பளத்திலிருந்து செலுத்த நேரிடும். குடும்பத்தின் கடன் சுமை அதிகரிக்கும்.
எனவே, உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் பக்கத்து மனையை வாங்குங்கள். கடன் வாங்கி வாங்க வேண்டாம். கடன் வாங்கி எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டாம். அது அபாயகரமானது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தையில் அதிகபட்சம் எத்தனை பங்குகளை வாங்குவது நல்லது: என்னைப் பொருத்தவரை பங்குச்சந்தையில் நேரடியாக ஈடுபடுவதற்கு அதிக மெனக்கெடல் அவசியம். ஒருவருடைய முதலீட்டு கலவையில் அதிகபட்சமாக 5% நேரடி பங்குகளாக வைத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள 95 % பரஸ்பர நிதிகள், பொது சேமநலநிதி போன்ற பரவலான முதலீடுகளை வைத்திருப்பது நலம். நேரடி பங்குச் சந்தை முதலீடுகள் ஒருமுகப்படுத்தப்பட்ட முதலீடுகள். அவற்றில் பணத்தை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை 5% நேரடி பங்குகள் முதலீட்டு பணத்தை இழந்தால் கூட, மீதம் உள்ள 95% பரவலான முதலீடு நமது குறிக்கோளினைக் காப்பாற்றி விடும்.
நீங்கள் 5% நேரடியாக பங்குச் சந்தையில் ஈடுபட எண்ணினால் , அதிகபட்சமாக 20 நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். அதற்கு மேலாக செல்லும் பொழுது அவற்றைக் கவனிப்பது கடினம். இவ்வாறு 20 நிறுவனங்களில் முதலீடு செய்வது நமது நேரடி பங்குச் சந்தை முதலீட்டையும் பரவலாக்குகிறது. பணத்தை இழக்கும் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த 20 நிறுவனங்களும் பல்வேறு துறை சார்ந்து பரவலாக இருப்பது நலம். அதன் மூலம் பணத்தை இழக்கும் அபாயத்தை நாம் குறைத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications