கிளாம்பாக்கம் பஸ், ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை பணி விறுவிறுப்பு.. ஜனவரியில் சாத்தியமா
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் ஜனவரியில் புதிய ரயில் நிலையம் திறப்பது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.. ஆகாய நடைபாதை பணிகளும் முழுமையாக முடியவில்லை.. எனவே தான் இந்த கேள்விகள் எழுந்துள்ளது.
சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படவில்லை. கிளாம்பாக்கம்பேருந்து நிலையத்தில் இருந்து தான் சென்னை மாநகர மக்களுக்காக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை சென்னை பாரிமுனை மற்றும் கோயம்பேட்டில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பழைய சென்னையின் பகுதிகளை கணக்கிட்டால் 30 முதல் 40 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அணுகுவது சவாலாக இருக்கிறது. தூரம் ஒரு காரணம் என்றால், ரயில் நிலையம் இல்லை.. அருகிலேயே ரயில் பாதை சென்ற போதிலும் சென்னை மக்கள் ரயிலில் போய் இறங்க முடியாத நிலை இருக்கிறது.
கிளாம்பாக்கம் போக வேண்டும் என்றால் பேருந்தில் மட்டுமே போக முடியும். இல்லை ரயில் போக வேண்டும் என்று விரும்பினால், வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வெகு தூரம் நடந்து சென்றோ அல்லது ஆட்டோ மூலம் பயணித்தோ செல்ல வேண்டிய நிலை இன்று வரை இருக்கிறது. இதனால் பலர் தாம்பரம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் கிளாம்பாக்கத்துக்கு சென்று வருகிறார்கள்.
இதற்கு தீர்வு காணும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அங்கு ஒரு நடைமேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மற்றோரு நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தாலும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க முடியாத நிலையே இருக்கிறது. ஏனெனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்ட பின்னரே திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகாய நடைபாதை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய ரயில் நிலையத்தை திறப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் கடந்த ஜூலை மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என முதலில் சொல்லப்பட்டு, பின்னர் அதை ஜனவரிக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள். தற்போது ஆகாய நடைபாதை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. பேருந்து நிலையத்துக்கு முன்பு உள்ள சாலையின் குறுக்கே ஆகாய நடைபாதை செல்லும் வகையில் இரும்பு பாலத்தை தூக்கி நிறுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைய போகிறது அதன் பின்னர், ரயில் நிலையம் வரை நடைபாதையை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
அதேநேரம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைப்பதுடன், கழிவறை வசதி மற்றும் டிக்கெட் கவுண்டர் வசதி போன்றவையும் அமைக்க வேண்டியுள்ளது. எல்லா பணிகளையும் முடித்துவிட்டு திறந்தால் தான் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், ஜனவரியில் முடிக்க முடியுமா என்ற கேள்விகள் உள்ளது. எனவே பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறப்பது என்பது அதிகாரிகளின் கைகளில் தான் உள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடக்காவிட்டால் மீண்டும் கிளம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு தள்ளிப்போகவே வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications