குத்தி காட்டிய தோனி? கர்மா சும்மா விடாது.. "அந்த" வார்த்தையை சொன்ன ஜடேஜா.. மோதல்? என்னாச்சு?
சென்னை: சிஎஸ்கே அணியில் ஜடேஜா - தோனி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர்.
கடந்த வருடமே ஜடேஜா சிஎஸ்கே கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட போது அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதோடு அவர் சிஎஸ்கே அணியில் இருந்தும் வெளியேறுவார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

ஜடேஜா பேட்டிங்:சிஎஸ்கே அணி ஒரு வழியாக போராடி ஐபிஎல் 2023 சீசனில் ப்ளே ஆப் போட்டிகளுக்கு சென்றுள்ளது. இதுவரை சிஎஸ்கே ஆடிய 14 போட்டிகளில் 12ல் சிஎஸ் கே அணி ப்ளே ஆப் சென்றுள்ளது.
நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 223 ரன்களை எடுத்தது. டெல்லி அணி வெறும் 146 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இதில் ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
பேட்டிங் சரியில்லை:இந்த போட்டியில் ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்தாலும் இதற்கு முந்தைய போட்டிகளில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. முக்கியமாக பேட்டிங்கில் விருப்பமே இல்லை என்பது போல அவர் ஆடி வருகிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்ட காரணத்தால் அவர் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த சீசனில் அவர் சிஎஸ்கேவில் ஆடும் விருப்பத்திலேயே இல்லை. தோனி அவரிடம் பேசி சமாதானம் செய்த காரணத்தினாலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்தார்.
இந்த நிலையில்தான் அவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, விருப்பம் இல்லைன்னா.. டீமை விட்டு போங்க பாஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால்தான் ஜடேஜாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ரசிகர்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு இல்லை:இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜடேஜா லைக் செய்த போஸ்ட் ஒன்று பெரிய சர்ச்சையானது.
ஜடேஜாவிற்கு மைதானத்தில் பெரிய வரவேற்பு இல்லை.
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களிலும் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்குமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனால்தான் ஜடேஜா பேட்டிங் செய்யும் போது அவர் அவுட் ஆனால் கூட அதற்காக வருத்தப்படாமல்.. ஓ என்று கத்தி ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
இது ஜடேஜா மனதையும் புண்படுத்தி உள்ளது.
அவரின் மனது கண்டிப்பாக புண்பட்டு இருக்கும் என்ற போஸ்ட் ஒன்றை ஜடேஜா லைக் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தோனி பேசினார்?:இந்த நிலையில் நேற்று முதல்நாள் போட்டிக்கு பின்.. தோனி பேசுகையில்.. தனது தனிப்பட்ட ரெக்கார்டுக்காக ஆடும் வீரர்கள் தேவை இல்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்களே தேவை என்று கூறினார்.
அவர் ஜடேஜாவை குத்திக்காட்டி இப்படி பேசியதாக கூறப்பட்டது.
மோதல் நடந்ததா?:இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் டெல்லி போட்டியில் வென்றதற்கு பின் ஜடேஜா - தோனி இடையே விவாதம் நடந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த பின் ஜடேஜா தோலில் கையை போட்டு தோனி ஏதோ சொன்னார். உடனே ஜடேஜா பதிலுக்கு ஏதோ சொல்ல.. இரண்டு பேரும் காரசாரமாக விவாதம் செய்தனர். இந்த விவாதம் முற்றவே தோனி முகத்தை சுருக்கிக்கொண்டு கோபமாக பேசினார்.
அவர் இப்படி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தோனி - ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படும் நிலையில்தான் ஜடேஜா - தோனி இடையே நேற்று மோதல் ஏற்பட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.
Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC
— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
பதிலடி:இதையடுத்து ஜடேஜா செய்த போஸ்ட் ஒன்றில்.. கர்மா உன்னை கண்டிப்பாக தண்டிக்கும். இப்போது இல்லை என்றாலும் பின்பாவது உன்னை கண்டிப்பாக தண்டிக்கும் என்று கூறி உள்ளார்.
அதில் ஜடேஜா.. definitely என்ற வார்த்தையை வேறு பயன்படுத்தி உள்ளார். கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் தோனி ஓய்வு பெறுவீர்களா என்ற கேள்விக்கு definitely not என்று கூறினார்.
அந்த வார்த்தையை இப்போது ஜடேஜா பயன்படுத்தி உள்ளதால், தோனிக்குதான் இந்த பதிலடியோ என்று எண்ண தோன்றுகிறது. இந்த போஸ்டை ஜடேஜா மனைவியும் ஷேர் செய்துள்ளார்.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
சிஎஸ்கேவை பாலோ செய்யும் காவ்யா மாறன்.. இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதை கவனிச்சீங்களா! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications