ஒரு சின்ன வாய்ஸ் கூட இல்லை.. திமுகவில் "பவரை" காட்டிய உதயநிதி.. அப்போ ரஜினி சொன்னது? எல்லாம் ஓவரா?
சென்னை: சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் விளையாட்டாக சொன்ன ஒரு கமெண்ட் திமுகவில் புயலை கிளப்பி உள்ளது. அதோடு இல்லாமல்.. திமுகவிற்குள் அனைத்தையும் காமெடியாக பேசும் மூத்த அமைச்சர் துரைமுருகன் இதற்கு தந்த ரியாக்சன்.. திமுகவில் பூகம்பத்தை கிளப்பியது. இப்படி இருக்கத்தான்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு விதமான கேள்விகளை இதில் எழுப்பி உள்ளன.
சமீபத்தில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது திமுகவில் குட்டையை குழப்பி உள்ளது. அதில், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

சீனியர்கள்: ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினார். ரஜினிகாந்த், "ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரலைவிட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், "பல்லு விழுந்த நடிகர்கள்" என்று கோபமாக கூறினார்.
உதயநிதி: இப்படி இருக்கத்தான்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு விதமான கேள்விகளை இதில் எழுப்பி உள்ளன. முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நிலையில், துரைமுருகன் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
வேலூரிலிருந்து சனிக்கிழமை சென்னை திரும்பிய அமைச்சர் துரைமுருகன், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார். புதன் கிழமை வரை சிங்கப்பூரில் இருக்கும் அவர், வியாழக்கிழமை சென்னை திரும்புகிறார்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக துரைமுருகன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கிடையாது.
ஆனாலும் பெரும்பாலும் நிர்வாகத்தை அவரே பொறுப்பெடுத்து கவனித்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. தலைமை செயலாளர் முருகானந்தம் தினசரி பணிகளை கவனிப்பார் . நிர்வாக பணிகளை மேற்பார்வையிடுவார். அதே சமயம் ஆட்சி, கட்சி ரீதியிலான பணிகளை உதயநிதி ஸ்டாலின் கவனிப்பார்.. இந்த பணிகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கவனித்துக்கொள்வார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக உதயநிதி ஸ்டாலின் தலைமை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முதல்நாள் நடந்தது. திமுகவின் கட்சி பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கேள்விகளை கேட்டதும் உதயநிதி ஸ்டாலின்தான். இதன் மூலம் அதிகார மையம் தான்தான் என்பதை நேற்று உதயநிதி ஸ்டாலின் நிரூபித்துள்ளார். ஸ்டாலின் இல்லாத நேரத்தில்.. துரைமுருகனும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் உதயநிதிதான் நிர்வாகத்தை வழி நடத்தி வருகிறார் என்பது இந்த மீட்டிங் மூலம் உறுதியாகி உள்ளது.
அதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் கூட வந்து சந்தித்துவிட்டு சென்றார். இதன் மூலம் கட்சியில் உதயநிதிக்கு சீனியர்கள் எதிர்ப்பு இல்லை.. ரஜினி சொன்னது அவர் கருத்தாக இருக்கலாம்.. ஆனால் சீனியர்கள் உதயநிதியை அல்லது இளைஞர்களை எதிர்க்கவில்லை என்ற வாதம் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மூலம் எழுந்து வருகிறது.
-
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications