திமுகவில் அதிகாரமிக்க பதவி கேட்கும் கனிமொழி எம்பி? இந்த 2ல் ஒன்று வேண்டுமாம்! லிஸ்ட்டை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து திமுக தனது கட்டமைப்பை மாற்றியமைத்து நடைபெற உள்ள தேர்தல்களில் வெல்லும் முனைப்பில் உள்ளது. இனறு சென்னையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு, நிர்வாகிகளின் நியமனம் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கனிமொழி தனக்கு அதிகாரமிக்க பதவியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தலிஸ்ட்டில் உள்ள 2 பதவிகளின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

is-kanimozhi-mp-seeking-a-powerful-position-within-the-dmk-three-key-roles-are-on-the-list

தமிழ சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கலாம் எனறு திமுக தலைவர் முக ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக திமுக தலைவர், சிட்டிங் முதல்வராக கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய முக ஸ்டாலினே தோல்வியடைந்தார்.

இது திமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இருப்பினும் திமுகவினர் துவண்டு போகவில்லை. அடுத்தடுத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தோல்விக்கான காரணம் பற்றி கேட்டு அறிக்கை பெறப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழு கூட்டம் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளை கழக செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆக தான் இருக்க வேண்டும். ஒரவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 7லோ் இருந்து 110 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 தான். ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்ட செயலாளராக செயல்பட முடியும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்மூலம் கட்சியில் அதிகமானவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்சியை வளர்ப்பார்கள் என்று முக ஸ்டாலின் நினைத்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது திமுகவில் தனக்கு அதிகாரமிக்க பதவியை தர வேண்டும் என்று கனிமொழி எம்பி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனிமொழி எம்பி தற்போது கட்சியில் துணை பொதுச்செயலாளராக உள்ளார். அதுமட்டுமின்றி திமுகவின் நாடாளுமன்ற எம்பிக்கள் குழுவின் தலைவராக உள்ளார்.

இப்படியான சூழலில் தான் கனிமொழி எம்பி திமுகவில் பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் பதவிகளில் ஒன்றை தர வேண்டும் என்று முக ஸ்டாலினிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் தலைவருக்கு அடுத்த பொறுப்பாக பொதுச்செயலாளர் பதவி உள்ளது. இந்த பொறுப்பில் முன்னாள் அமைச்சர் துரை முருகன் உள்ளார். வயது முதிர்வு, உடல்நல பிரச்சனைகளை துரை முருகன் எதிர்கொண்டு வருகிறார். அதற்கு அடுத்தப்படியாக பொருளாளர் பொறுப்பு வரும். இதில் டிஆர் பாலு எம்பி உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக முதன்மை செயலாளர் பொறுப்பு வரும். இதில் முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு உள்ளார்.

இந்நிலையில் தான்பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் பதவியை கனிமொழி எம்பி குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கனிமொழி கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், முதன்மை செயலாளர் பதவிக்கு அடுத்த வரும் துணை பொதுச்செயலாளர் பதவியில் உள்ளார்.

திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கட்சி ரீதியாக இளைஞரணி செயலாளராக தான் உள்ளார். இது சார்பு அணி என்ற அடிப்படையில் தான் வரும். கட்சியின் தலைமையில் வராது. ஆனால் கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர், துணை பொதுச்செயலாளர் உள்ளிட்டவை கட்சியின் தலைமை என்ற வகையில் உள்ளது. தற்போது கனிமொழி எம்பி கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள நிலையில் இன்னும் அதிகாரமிக்க பதவியை கோரியுள்ளார்.

மேலும் கனிமொழி எம்பி திமுகவின் மகளிரணி செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இதனால் மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கனிமொழி எம்பிக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். கட்சியில் கட்டமைப்புரீதியாக மாற்றம் செய்யும்போது மகளிரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மகளிருக்கும் பொறுப்பு வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் கூறியுள்ளனர். இதுபற்றியும் கனிமொழி, முக ஸ்டாலினிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+