நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு வாடகைத் தாயாக இருந்தவர் "இவரா"?.. வெளியான தகவல்
சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாடகைத் தாயாக இருந்தவர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணத்தின் போதும் நயன்தாரா 6 மாத கர்ப்பிணியாக தோற்றமளிக்கவில்லை என்பதால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

வாடகைத் தாய்
வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஏதோ சீரியலில் காட்டுவது போல் சாதாரண விஷயம் இல்லை. இதற்கு நிறைய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. கணவனுக்கோ மனைவிக்கோ திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

இயற்கை முறை
இவர்களில் யாராவது ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்பதை மருத்துவர்கள் சான்றளித்தால் அவர்கள் வாடகைத் தாய் முறையை தேர்வு செய்யலாம். இதையும் மருத்துவரே பரிந்துரை செய்ய வேண்டும். வாடகைத் தாயாக வருபவர் அந்த தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும்.

பண கஷ்டம்
பண கஷ்டத்திற்காக குழந்தை பெற்று கொடுக்கும் வகையில் வணிக ரீதியில் இந்த முறையை பயன்படுத்தக் கூடாது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு, நயனின் கேரளத்து உறவினர் ஒருவர் வாடகைத்தாயாக இருந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன உறவு
அவர் யார், என்ன உறவு முறை என்றெல்லாம் தெரியவில்லை. அந்த பெண்ணை நயன்தாரா தரப்பு அணுகி அவரது சம்மதம் கேட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. மேலும் வாடகைத் தாயாக அந்த பெண்ணுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர் சான்றளித்த பிறகே இந்த முறைக்கான செயல்பாடுகள் தொடங்க5ப்பட்டன என்கிறார்கள்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணத்திற்கு முன்பே வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றுக் கொள்வது என பேசி வைத்து கொண்டு பிறகு இருவரது குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களிடமும் சம்மதம் பெற்ற பின்னரே இது போல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை இவர்கள் தொடங்கினார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications