"உங்களுக்கே புரியும்".. பட்டென சொன்ன கமல்ஹாசன்.. திமுக + காங்கிரஸ் + மநீம.. அப்போ கன்பார்ம்டா?
சென்னை: தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள், வியூகங்கள் தொடர்பான விவாதங்கள் இப்போதே எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களுக்கும் மேல் உள்ளது. ஆனாலும் இப்போதே தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுகள், பேட்டிகள், ஆலோசனைகள் தொடங்கிவிட்டன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்தது என்னவோ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம்.

எடப்பாடி என்ன சொன்னார்?
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.

காங்கிரஸ்
இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்துவிட்டு எடப்பாடி காங்கிரசுடன் கூட்டணி வைக்க போவதாக செய்திகள் வந்தன. அதாவது அதிமுக + காங்கிரஸ் + விசிக + மக்கள் நீதி மய்யம் சேர்ந்து கூட்டணி வைக்கும். இந்த கூட்டணியைத்தான் எடப்பாடி மெகா கூட்டணி என்று கூறுகிறார். அவரின் மெகா கூட்டணியில் பாஜகவிற்கு இடம் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தன. இதில் மக்கள் நீதி மையம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விகள் தீவிரமாக எழுந்து வந்தன. அதிமுகவின் மெகா கூட்டணியா, திமுகவின் கூட்டணியா அல்லது தனியாக நிற்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆலோசனை
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

என்ன நடந்தது?
இதையடுத்தே கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்.. நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேச்சு காரணமாக.. எங்கே மக்கள் நீதி மய்யம் திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு காரணம் இருக்கிறது.

கூட்டணி எப்படி?
நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படியே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.

உதயநிதி
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன் ஆகியோர் விக்ரம் படம் வழியாக நெருக்கம் ஆனார்கள். இந்தியன் 2 உள்ளிட்ட படங்களையும் பெரும்பாலும் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனமே ரிலீஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர்கள் மேலும் நெருக்கமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி திமுகவுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாக இருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களை வைத்து பார்க்கையில் எங்கே திமுக + காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கு கமல் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைத்தான் நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications