ஸ்டாலின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்.. ஈசியாக கடந்து போன "பாஜக" தலை.. டெல்லி வரை போன மெசேஜ்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்ட மன்றத்தின் பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், திமுகவுடன் மறை முகமாக கைக்கோர்த்து அரசியல் செய்வதாக டெல்லியிலுள்ள தேசியத் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வரும் 4 கோடி ரூபாய் வழக்கு, நயினாருக்கு அரசியல் ரீதியாக சிக்கலை உருவாக்கும் சூழல் இருக்கிறது.

Nainar Nagendran

வழக்கு பின்னணி: சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு மிகப்பெரிய நெருக்கடி தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைதானவர்கள், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விசாரணை: இதில் எஸ்.ஆர்.சேகரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை செய்தனர். அதில், எனக்கும் அந்த பணத்திற்கும் தொடர்பு இல்லை. அது யார் பணம் என்று தெரியாது. அதை நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்.

எனக்கு அன்றைய தினம் வந்த போன் கால் பற்றி கேட்டு உள்ளீர்கள். அது எல்லாம் எனக்கு நினைவு இல்லை. எப்படி எல்லா தினமும் வரும் போன் கால் பற்றி நினைவில் வைத்திருக்க முடியும். அந்த பணம் யாருடையது என்பது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

திட்டம் என்ன?: சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யப்பட்டு உள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் செய்யப்பட்ட விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்: வழக்கில் நயினாருக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வைத்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக திமுக தலைமையுடன் நெருங்கியுள்ளார் நயினார் நாகேந்திரன். அதனால்தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் அவர் பதிவு செய்யவில்லை.

கள்ளச்சாராய விவகாரத்தை தேசிய தலைவர்கள் பலரும் திமுக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டிய நிலையில், அதே வேகத்தில் நயினார் நாகேந்திரனும் சட்டமன்றத்தில் திமுகவை அட்டாக் செய்திருக்க வேண்டும். பாஜக தொண்டர்கள் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதைச் செய்யாமல் ஏதேதோ பேசினார்.

அதேசமயம், கள்ளச்சாராய விவகாரத்தை எடுத்து சட்டமன்றத்தில் தங்களின் அரசியலை நிலை நிறுத்திக் கொண்டார்கள் அதிமுக தலைவர்கள். கள்ளச்சாராய உயிர்பலிக்கு எதிராக களமாட வேண்டிய நயினார் நாகேந்திரன், ஈசியாக கடந்து போய்விட்டார்.

முதல்வரின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என அவர் கருதியிருக்கிறார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி வளர்ப்பது ? திமுகவை எதிர்த்து தொண்டர்கள் அரசியல் செய்யும் போது, நயினார் போன்றவர்கள் திமுகவிடம் அண்டர்லிங்க் வைத்துக் கொள்வதை எப்படி ஜீரணிப்பது ? அதனால், இது குறித்து நயினாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லிக்கு அனுப்பிய புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+