அந்த இரவை மறக்க முடியுமா? மீண்டும் "பழைய" ரூட்டில் ஓபிஎஸ்.. எடப்பாடி கனவை கலைக்க "மெகா" திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்ததற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    ADMK-வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனைகளுக்கு DMK-தான் காரணம் -சசிகலா குற்றச்சாட்டு

    அதிமுகவில் கடந்த வாரம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 23ம் தேதி நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை.. அதாவது பொதுச்செயலாளர் பதவி ஏற்பு தொடர்பாக தனி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முயன்றது.

    இந்த தீர்மானம் மூலம் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்க அவரின் ஆதரவாளர்கள் முயன்றனர். ஆனால் இதற்கு சட்ட ரீதியாக ஓ பன்னீர்செல்வம் தடை பெற்றார்.

     பொதுக்குழு

    பொதுக்குழு

    இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. முதலில் உரிமையியல் நீதிமன்றம் பொதுக்குழுவை தடை செய்யவும், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கட்டுப்பாடு மறுத்தது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இரவோடு இரவாக மேல்முறையீடும் செய்தது. 22ம் தேதி இரவே விசாரணை நடந்தது.

     விசாரணை

    விசாரணை

    இரவு முழுக்க அந்த விசாரணை நடந்து 23ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் புதிதாக தீர்மானம் எதையும் நிறைவேற்ற கூடாது. ஒப்புதல் பெறப்பட்ட 23 வரைவு தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அந்த தீர்ப்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதை அப்போது தடுத்தது.

     மறக்க முடியாத இரவு

    மறக்க முடியாத இரவு

    அந்த இரவை கண்டிப்பாக ஓபிஎஸ்ஸும் மறந்து இருக்க மாட்டார்.. இபிஎஸ்ஸும் மறந்து இருக்க மாட்டார். அந்த தீர்ப்புதான் தற்போதும் அதிமுகவில் மோதல் நீடிக்க முக்கிய காரணம் ஆகும். இந்த நிலையில் கடந்த பொதுக்குழுவில் மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். அவர் ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி வாங்காமல், பொதுக்குழு நிர்வாகிகள் கடிதத்தின் அடிப்படையில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

     ஓபிஎஸ் பிளான்

    ஓபிஎஸ் பிளான்

    ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அசாதாரண சூழ்நிலையால் அதிமுக கட்சி பதவிகளில் மாற்றம் ஏற்படுத்த தடை கோரவும் ஓபிஎஸ் அணி திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது, சட்டப்படி அதிமுகவில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதாவது ஓபிஎஸ்ஸுக்கும் - இபிஎஸ்ஸுக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது.

    அதிகாரம்

    அதிகாரம்

    ஆனால் அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்தார். இதன் காரணமாக பொதுக்குழு கூடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி ஓபிஎஸ் வழக்கு தொடுப்பார் என்கிறார்கள். இதன் மூலம் காலதாமதம் செய்து பொதுக்குழுவை தள்ளி வைக்க ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறதாம். அதாவது.. ஒருவேளை வழக்கு உயர் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில்.. அதில் என்ன தீர்ப்பு வந்தாலும்.. ஓபிஎஸ் - இபிஎஸ் இரண்டில் ஒரு தரப்பு கண்டிப்பாக உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யும். எனவே கண்டிப்பாக வழக்கு அடுத்த 3-4 வாரங்களுக்கு செல்லும் என்பதால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடப்பது சந்தேகத்திற்கு உரிய விஷயம் ஆகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+